நாகை, காரைக்கால் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது; 2 விசைப் படகுகள் சிறைபிடிப்பு

Nagai, Karaikal fishermen arrested by Sri Lanka Navy; Capture of 2 powerboats

நாகை, காரைக்கால் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது; 2 விசைப் படகுகள் சிறைபிடிப்பு

நாகப்பட்டினம்: நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 விசைப் படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

இரு விசைப் படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்களும், காரைக்காலைச் சேர்ந்த 9 மீனவர்களும் திங்கள்கிழமை இரவு கோடியக்கரைக்கு தெற்கே ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அங்கு 9 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்த இலங்கைக் கடற்படையினர், நாகை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 21 மீனவர்களையும் கைது செய்து, அவர்களின் படகுகளையும் சிறைபிடித்தனர்.

பின்னர், காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கையில், பருத்தித்துறை மீனவர்கள் திங்கள்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.