குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்திறனை அதிகரிக்க உதவும் சில பயிற்சிகள்..!

குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்திறனை அதிகரிக்க உதவும் சில பயிற்சிகள்..!

வீட்டு வேலைகளை முடிக்க உங்கள் குழந்தைகளின் உதவியைப் பெறுங்கள். டேப்லெட்களைத் துடைப்பது, ஜன்னல்களை துடைப்பது மற்றும் டைனிங் டேபிளை அமைப்பது, வீட்டில் களைந்து கிடைக்கும் பொருட்களை ஒழுங்குபடுத்தல் போன்ற எளிய பணிகளை அவர்களுக்குக் கொடுக்கலாம். 

  குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமான கட்டம். அவர்களின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குவது போல, மனவளர்ச்சியை மேம்படுத்துவதிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, உங்கள் குழந்தைகளை Crossing the midline activities போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது மிக முக்கியம். அது என்ன Crossing the midline activities என்று யோசிக்கிறீர்களா? உண்மையில் இதன் அர்த்தம் இடைப்பட்ட செயல்பாடுகளை கடத்துதல் என்பதாகும்.   

அதாவது, உடலின் மையத்தில் குழந்தைகளின் கை அல்லது காலை நகர்த்த வேண்டிய பணிகளை இந்த பயிற்சிகள் குறிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் கையின் பயன்பாட்டை செம்மைப்படுத்த உதவுகின்றன. இது உடலை உறுதிப்படுத்த உதவுகிறது. எனவே கைகள் மற்றும் கால்களை ஒரு கட்டுப்பாட்டு முறையில் நகர்த்த முடியும். இதனை செயல்படுத்துவதன் மூலம் அவர்களின் மனவளர்ச்சி மேம்படும். சரி, அப்படியானால் உங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான செயல்பாடுகளை கொடுக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.    வீட்டு வேலைகளில் உதவச் செய்யலாம்:.          வீட்டு வேலைகளை முடிக்க உங்கள் குழந்தைகளின் உதவியைப் பெறுங்கள். டேப்லெட்களைத் துடைப்பது, ஜன்னல்களை துடைப்பது மற்றும் டைனிங் டேபிளை அமைப்பது, வீட்டில் களைந்து கிடைக்கும் பொருட்களை ஒழுங்குபடுத்தல் போன்ற எளிய பணிகளை அவர்களுக்குக் கொடுக்கலாம்.    உங்கள் குழந்தைகளுடன் வரிசைப்படுத்தும் நடவடிக்கைகளை விளையாடுங்கள். விலங்குகள் அல்லது வண்ணங்கள் போன்றவற்றை வரிசைப்படுத்த வேண்டிய கேம்களை கடைகளில் இருந்து வாங்கி அவர்களை விளையாட செய்யலாம்.                                                                 

 படம் 8s :.                     

 ஒரு தாளில் 8 எண் வடிவம் மற்றும் பிற வடிவங்களை ஸ்கெட்ச் செய்து, உங்கள் குழந்தையை வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தி அந்த வடிவத்தைக் கண்டுபிடிக்கச் செய்யுங்கள். இதனால் உங்கள் குழந்தையின் அறிவு மேம்படும்.     

குளிர்காலத்தில் உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

கலரிங் ஆக்டிவிட்டி:.      

 உங்கள் குழந்தைகளுக்கு கலரிங் ஆக்டிவிட்டி கொடுப்பது அவர்களின் கை செயல்பாடுகளை அதிகரிப்பதற்குச் சமம். இது உங்கள் குழந்தைகளின் திறன்களை வளர்க்க உதவும். எனவே அவர்கள் கலரிங் செய்யும் வகையில் புத்தகங்களை வாங்கி கொடுங்கள்.         

                 

    பக்க விளைவு பயிற்சிகள்:             உங்கள் குழந்தையை நிமிர்ந்து நிற்கச் சொல்லுங்கள், பின்னர் கைகளை உயர்த்தச் சொல்லி, அவர்களின் உடல்பகுதியை இடது மற்றும் வலது பக்கவாட்டில் வளைக்கச் சொல்லுங்கள். 

விண்ட்மீல் பயிற்சி:

உங்கள் குழந்தையை நிமிர்ந்து நிற்கச் சொல்லி, பின்னர் நேர்கோட்டில் குனிந்து தங்களது வலது கையால் இடது பாதத்தையும் பின்னர் இடது கையால் வலது பாதத்தையும் தொடச் சொல்லுங்கள்.

மேற்கண்ட செயல்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையின் மன வளர்ச்சி மற்றும் சித்திக்கும் திறனை மேம்படுத்த முடியும். அதே சமயம் அவர்களின் உடல் உறுதியும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.