சென்னை - மேட்டுப்பாளையம் ரெயில் கோவையுடன் நிறுத்தம் - தெற்கு ரெயில்வே

சென்னை - மேட்டுப்பாளையம் ரெயில் கோவையுடன் நிறுத்தம் - தெற்கு ரெயில்வே
சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.;

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோவை வடக்கு - கரைமடை இடையே தண்டவாளம் மற்றும் மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 12671) வரும் 26 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதிகளில் கோவையுடன் நிறுத்தப்படும். அதாவது, கோவை - மேட்டுப்பாளையம் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.