இந்த பசு இனத்தை வளர்த்தால் மட்டும் போதும்... ஒரே ஆண்டில் லட்சாதிபதி ஆகலாம்
குஜராத் மாநிலம் மஹேசானா மாவட்டம், விஸ்நகர் தாலுகாவின் காகரெட் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்பாய் பட்டேல் 2019ஆம் ஆண்டிலிருந்து கீர் இன பசுக்கள் வளர்ப்பு செய்து வருகிறார். அவரிடம் உள்ள அனைத்து பசுக்களும் கீர் இனத்தையே சேர்ந்தவை. அதில் “கேனி” என அழைக்கப்படும் ஷியாம் கபிலா கீர் பசு குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பசுவை ராஜேஷ் சிறு வயதிலிருந்தே வளர்த்து இன்று அதிக பாலை வழங்கும் நிலையில் வைத்திருக்கிறார்.

இந்த பசுவின் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சமாகும். இந்த பசு தினமும் 17 முதல் 18 லிட்டர் வரை பாலை அளிக்கிறது. முக்கியமாக, இந்த பசுவிற்கு தினமும் பாலின் உற்பத்திக்கு பாதி அளவிற்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது.
இதுக்குறித்து ராஜேஷ் கூறுகையில், அவர் பசுக்களிடம் பால் கறக்கும் போது, அதில் 50% பாலை வியாபாரத்திற்கும் மீதமூள்ளவற்றை கன்றுக்குட்டிகளுக்கு வழங்குகிறார். பசுக்களுக்கு ஊட்டமாக, இயற்கையாகத் தயாரித்த புல் மற்றும் எண்ணெய், கடலை, வேர்க்கடலை, வெந்தயம், ஓமம், வெல்லம் ஆகியவைகளுடன் கலந்த அத்துடன் சுமார் 6-7 கிலோ அளவில் "ஸவா மணி" எனப்படும் உணவையும் வழங்குகிறார். மேலும், காய்கறி மூலிகைகள் மற்றும் சித்த வைத்தியப் பொருட்களும் வழங்கப்படுகின்றன..
இப்போது, தினசரி ₹2,500 வருமானத்தை இந்த ஒரு பசுவின் பால் மூலம் சம்பாதிக்கிறார். மாத வருமானம் சுமார் ₹75,000 இருக்க, அதில் 40-50% வரை இந்த பசுவின் பராமரிப்பில் செலவாகிறது..
ராஜேஷ் குடும்பம் தினசரி சுமார் 90 லிட்டர் பாலை பசுக்களிடம் இருந்து பெறுகின்றனர். ஆனால், 50% பால் மட்டுமே கறந்து தினசரி 45 லிட்டர் பாலை மட்டும் விற்பனை செய்கிறார். இந்த பாலை விஸ்நகர் நகரத்தில் ₹150 லிட்டருக்கு விற்பனை செய்கிறார். கூடுதலாக, மாதம் 20 கிலோ வரை நெய்யும் தயாரித்து விற்கின்றார். அந்த நெய் ₹5,000 கிலோவுக்கு விற்பனை செய்யப்படுகிறது..


Yasmin fathima

