ஊபர் செயலியில் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம்
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற வற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஊபர் செயலியிலும் இனி சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊபர் செயலி மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை 50 சதவீதம் சலுகை விலையில் மெட்ரோ டிக்கெட்டை பெறலாம். (QR - Codeஐ) க்கியூஆர் கோர்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் டிக்கெட்டை பெறலாம். மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லவும், திரும்பவும் பயணக்கட்டணத்திலும் 50சதவீதம் சலுகை அறிவித்துள்ளது. ஆட்டோ, கார், டூ வீலர் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு அடுத்து ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் வசதியை பெறும் 2வது நகரம் சென்னையாகும்.


Yasmin fathima

