பயோனியர் குமாரசாமி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
வணிக தானியங்கி மற்றும் மேலாண்மை திறன்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் செப்டம்பர் 2, 2025 அன்று நடைபெற்றது
நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரி வணிகவியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், நிறுவனர் முனைவர் கே. பத்மநாபனின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக “வணிக தானியங்கி மற்றும் மேலாண்மை திறன்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் செப்டம்பர் 2, 2025 அன்று நடைபெற்றது.

கருத்தரங்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் செ. சுபத்ரா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சி. ஜெயசேகரன் தலைமை வகித்து கருத்துரையாற்றினார். துணை முதல்வர் முனைவர் ஜி. ரெக்சின் தஷ்னேவிஸ் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களை முனைவர் அனிதா அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் பி. ராஜன் முக்கிய உரையை வழங்கி, வணிகத் துறையில் தானியங்கியின் வளர்ச்சி மற்றும் அதன் தாக்கத்தை விளக்கினார்.

பின்னர், உதவி பேராசிரியர் முனைவர் என். உமைபா தலைமையில் ஆய்வுக் கட்டுரை வாசிப்பு அமர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர்களில் சிறந்த கட்டுரை வழங்கிய மாணவர்களுக்கு விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து பிடிஎம் டெக்னாலஜி நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராபின் டெல்வர் சிறப்புரை ஆற்றி, தொழில்நுட்ப முன்னேற்றங்களின் நடைமுறைப் பயன்பாடுகளை பகிர்ந்தார்.
இந்நிகழ்வு கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். முகம்மது அபூபக்கர் சித்திக் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
கல்வி மற்றும் தொழில் துறைகளின் இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த கருத்தரங்கம், மாணவர்களின் திறன்கள் மற்றும் தொழில்துறை அறிவை மேம்படுத்தும் நோக்கில் அமைந்தது என்பது குறிப்பிடதக்கது.



