ஜூன் மாதத்தில் சர்ரென உயர்ந்த விற்பனை! பைக்குகளை விற்றுத்தள்ளும் சுசுகி
Two-Wheeler Sales April 2023: நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களுக்கு அதிக தேவைக்கு மத்தியில் Suzuki Motorcycles India நிறுவனமானது கடந்த மாதத்தில் (ஜூன், 2023-ல்), மொத்தமாக 80,737 யூனிட்ஸ்களை விற்பனை செய்துள்ளது.
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் கடந்த ஜூன் மாதத்தில் 80,737 யூனிட்களை விற்பனை செய்ததன் மூலம் மொத்த விற்பனையில் 18.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இது தொடர்பாக Suzuki Motorcycle India Pvt Ltd (SIMPL) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனம் இதே காலகட்டத்தில் அதாவது ஜூன் 2022-ல் மொத்தம் 68,018 யூனிட்களை விற்றதாக தெரிவித்துள்ளது.இந்த வகையில் ஜூன் 2022 மாத விற்பனையோடு ஒப்பிடும் போது இந்த ஜூன் 2023-ல் year-on-year வாளர்ச்சியானது 18.7 சதவீதமாகும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதே போல ஜூன் 2022-ல் 52,929 யூனிட்களாக இருந்த டொமஸ்டிக் சேல்,19.1% உயர்ந்து 63,059-ஆக இருந்தது.
ஒரு வருடத்திற்கு முன் ஏற்றுமதி செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 15,089-ஆக இருந்தது. தற்போது இந்த ஏற்றுமதிஎண்ணிக்கை 17.2 சதவீதம் அதிகரித்து 17,678-ஆக இருக்கிறது. இதற்கிடையே SIMPL நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரான தேவாஷிஷ் ஹண்டா (Devashish Handa) கூறுகையில், சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா தொடர்ந்து டபுள்-டிஜிட் விற்பனை அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.
இந்த சூழலில் எங்கள் நிறுவனத்தின் 2023 ஜூன் மாத விற்பனை வளர்ச்சியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் எங்களது தயாரிப்புகளுக்கான வலுவான தேவையை காட்டுகிறது. எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர் பார்ட்னர்களின் வலுவான தொடர் ஆதரவிற்காக நாங்கள் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.