அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் தைப்பூச திருவிழாவில் மாபெரும் அன்னதான விழா
தைப்பூச திருவிழாவில் மாபெரும் அன்னதான விழா
தைப்பூச திருவிழாவானது பழனிக்கு அடுத்து கரூர் மாவட்டம் குளித்தலையில் வருடம் தோறும் மிகச் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தை சார்ந்த 8-கோயில்களின் சுவாமிகள் மிக அருமையான அலங்காரத்தோடு வாகனங்களில் காவிரி நதிகரையின் அருகே ஒன்று கூடி விக்ரங்கள் காவிரி நதியில் புனித நீராடும் தீர்த்தவாரி மிகவும் தாமதமாக நடைபெற்றது. தைப்பூச திருவிழாவில் இந்த ஆண்டு பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது.
இந்த தைப்பூச திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் போல இந்த ஆண்டும் மாபெரும் அன்னதான விழா 2-நாட்களும் மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து அன்னம் பெற்று மகிழ்ச்சியாக சாப்பிட்டு சென்றனர்.இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கிராமியம்.
நாராயணன் , வாழைக்காய் வியாபாரி சேட்,கரூர் சுரேஷ் கென்னடி ,சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி மற்றும் பல துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த விழா ஏற்பாட்டினை சங்கத்தின் பொறுப்பாளர்கள் கருணாநீதி , ராமகிருஷ்ணன் , ஆனந்த் ,வாளந்தூர் மதி , Er.சரவணன் ,அர்ச்சகர் விஷ்ணு , மணமேடு சங்கரன் , திருமுருகன் , முத்து , சரவணன் ஜி, தியானேஷ் , மணி , முகிலன் , சந்தோஷ் , கருப்பத்தூர் முரளி , வினோத் ,தினேஷ், ராமு , கோபி,கார்த்திக், கார்த்திக் ,மோகன், தினா, வீரப்பன் உட்பட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.