வாக்கு திருட்டு விவகாரத்தில் சொந்த கட்சியை கடுமையாக விமர்சித்த‌ கர்நாடக அமைச்சர் கே.என்.ராஜண்ணா ராஜினாமா

வாக்கு திருட்டு விவகாரத்தில் சொந்த கட்சியை கடுமையாக விமர்சித்த‌ கர்நாடக அமைச்சர் கே.என்.ராஜண்ணா ராஜினாமா
வாக்கு திருட்டு விவகாரத்தில் சொந்த கட்சியை கடுமையாக விமர்சித்த‌ கர்நாடக அமைச்சர் கே.என்.ராஜண்ணா ராஜினாமா

பெங்களூரு: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, ‘‘2024 மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக​வும் தேர்​தல் ஆணை​ய​மும் கூட்டு வைத்​துக்​கொண்​டு, வாக்​கு​களை திருடி​யுள்​ளது. பெங்​களூரு​வில் உள்ள மகாதேவப்​புரா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் மட்டும் ஒரு லட்​சத்​துக்​கும் அதி​க​மான வாக்​கு​கள் திருடப்​பட்​டன'' என குற்​றம்​சாட்​டி​னார்.

இந்நிலை​யில், கர்​நாடக கூட்​டுறவுத் துறை அமைச்​சர் கே.என்​. ராஜண்​ணா, ‘‘வாக்கு திருட்டு விவ​காரத்​தில் காங்​கிரஸார் வெட்கப்பட வேண்​டும். கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்த போதே வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பட்​டது. அதனை ஏன் நாம் தடுக்​க‌​வில்​லை? வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட போது நாம் ஆட்​சேபம் தெரி​வித்​திருந்​தால், இந்த பிரச்​சினையை ஆரம்​பத்​திலேயே தடுத்​திருக்க முடி​யும்​'' என்​றார்.

அமைச்​சர் கே.என்​.​ராஜண்ணா​வின் இந்​தக் கருத்தை பாஜக​வினர் ஆதரித்த நிலை​யில், துணை முதல்​வர் டி.கே. சிவகு​மாரின் ஆதர​வாளர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர். காங்​கிரஸ் எம்​எல்ஏ எச்​.டி. ரங்​க​நாத் கூறுகை​யில், ‘‘வாக்​குத் திருட்டு விவகாரத்தை விசா​ரிக்க கர்​நாடக அரசு முடிவு செய்​துள்​ளது. விசா​ரணை முடிவடைவதற்கு முன்பே காங்​கிரஸ் கட்​சிக்​கும், ஆட்சிக்கும் எதி​ராகப் பேசுவதை மன்​னிக்க முடி​யாதது’’ என கண்​டித்​தார்.

மேலும் காங்​கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்​தது. அவரை அமைச்​சர் பதவி​யில் இருந்து நீக்​கு​மாறு முதல்​வர் சித்தராமையாவுக்கு உத்​தர​விட்​டுள்ளது. இதையடுத்து சித்​த​ராமை​யா, கூட்​டுறவுத்​துறை அமைச்​சர் கே.என்​.​ராஜண்​ணாவை அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்​யு​மாறு வலி​யுறுத்​தி​னார். முதலில் இதற்கு மறுப்பு தெரி​வித்த கே.என்​.​ராஜண்​ணா, நேற்று தனது அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்​வ​தாக அறி​வித்​தார்.கே.என்​.​ராஜண்​ணா​வின் ராஜி​னாமா கடிதத்தை பெற்ற முதல்​வர் சித்​த​ராமையா ஏற்​றுக்​கொண்​டு, உடனடி​யாக அமைச்சரவையில் இருந்து விடுவிக்​கு​மாறு ஆளுநர் தாவர்​சந்த் கெலாட்​டுக்கு கடிதம் அனுப்​பி​னார். இந்த விவ​காரம்​ கர்​நாடக அரசி​யலில்​ பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.