பரியேறும் பெருமாள் பட வாய்ப்பை தவறவிட்டதற்கு மிகவும் வருத்தப்பட்டேன் - அனுபமா பரமேஸ்வரன்

பரியேறும் பெருமாள் பட வாய்ப்பை தவறவிட்டதற்கு மிகவும் வருத்தப்பட்டேன் - அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ப்ரீ ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி அண்மையில் நடைப்பெற்றது.

அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ப்ரீ ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி அண்மையில் நடைப்பெற்றது. இப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார்.

ப்ரவீன் இதற்கு முன் சினிமா பண்டி மற்றும் சுபம் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பரதா திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பரதா கட்டாயமாக அணியும் வழக்கத்தை வைத்திருக்கும் கிராமத்தில் இருந்து அனுபமா வருகிறார், அவர் ஒரு பயணத்தில் மற்ற பெண்களை மற்றும் உலகை புரிந்துக் கொள்ளும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அனுபமா அவர் நடித்து முடித்துள்ள பைசன் திரைப்படத்தை பற்றி சில விஷயங்களை கூறினார் " மாரி சார் முதலில் பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க அழைத்தார் அப்போது நான் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்ததால் டேட் இல்லாததால் என்னால் நடிக்க முடியவில்லை, அந்த முடிவை எண்ணி நான் அதிகம் வருத்தப்பட்டுள்ளேன். அதன் பிறகு மாமன்னன் திரைப்படத்தில் நடிக்க அழைத்தார் அப்போதும் என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் பைசன் திரைப்படத்தில் நடிக்க அழைத்தார் இம்முறை இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என இப்படத்தில் நடித்தேன். ஒரு நடிகராக இப்படம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது" என கூறியுள்ளார்.