சென்னை - மும்பை ரெயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
மத்திய ரெயில்வே பகுதியில் உள்ள அம்பர்நாத் - பத்லாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் புதிதாக கல்யாண் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மேம்பாலம் ஒன்று அகற்றப்பட இருப்பதால், அப்பகுதியில் மின்தடை செய்யப்பட இருப்பதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து நாளை (9-ந்தேதி) காலை 6.35 மணிக்கு மும்பை புறப்படும் சி.எஸ்.டி. அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 22158) மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதாவது, லோனாவாலா, கர்ஜாத், பன்வேல் மற்றும் தானே வழியாக திருப்பி விடப்படுகிறது. இந்த வழித்தடத்தில் இந்த ரெயில் கூடுதலாக பன்வேல் மற்றும் தானே ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Yasmin fathima

