இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
சமண முனிவர்கள்

நாலடியார்

அறத்துப்பால்- துறவறவியல்

யாக்கை நிலையாமை அதிகாரம்

பாடல் : 022

"வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்

வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்

உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்

நிலவார் நிலமிசை மேல்".

     

                                         -சமண முனிவர்கள்.

பொருளுரை:

                  உயிரோடு வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் உதயமாதலால், ஆயுள் கெடா முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். (சூரியன் தோன்றுவது - ஒரு நாள் கழிந்தது; இரு நாட்கள் கழிந்தன என ஆயுளை அளவிடுவதாக இருத்தலால், வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது கருத்து.)