இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
கபில தேவர்

 இன்னா நாற்பது 

பாடல் - 29

"குறியறியான் மாநாக மாட்டுவித்த லின்னா

தறியறியா னீரின் பாய்ந்தாட லின்னா

அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா

செறிவிலான் கேட்ட மறை". 

                                  - புலவர் கபில தேவர்.

விளக்கம்:

                பாம்பினை அடக்கத் தெரியாதவன் பெரிய பாம்பினை ஆடச் செய்தல் துன்பமாம். உள்ளிருக்கும் ஆழத்தை அறியாமல் நீரில் பாய்ந்து விளையாடுதல் துன்பமாம். அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாம். அடக்கமில்லாதவன் கேட்ட இனிய உரை துன்பமாம்.