இன்றைய திருக்குறள்
திருக்குறள்

செய்ந்நன்றி அறிதல்
"மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .



