எம்.பி.க்களுக்கான 184 அடுக்குமாடி குடியிருப்புகள்: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

எம்.பி.க்களுக்கான 184 அடுக்குமாடி குடியிருப்புகள்: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
டெல்லியில் எம்.பி.க்களுக்காக கட்டப்பட்டு உள்ள 184 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். உடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளனர்

புதுடெல்லி: டெல்​லி​யில் எம்​.பி.க்​களுக்​காக கட்​டப்​பட்டு உள்ள 184 அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வீடு​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார். மத்​திய அமைச்​சர்​கள், எம்.​பி.க்​களுக்கு மத்​திய அரசு சார்​பில் டெல்​லி​யில் வீடு​கள் ஒதுக்​கப்படுகின்றன.

இதன்​படி மத்​திய அமைச்​சர்​களுக்கு பிரிவு 4-ம் வகை பங்​களாக்​கள் ஒதுக்​கப்​படு​கின்​றன. இதே​போல 2-ம் முறை எம்.​பி.​யாக தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு பிரிவு 6, 7-ம் வகை பங்​களாக்​கள், வீடு​கள் வழங்​கப்​படு​கின்​றன. முதல்​முறை எம்.​பி.க்​களுக்கு அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களில் வீடு​கள் ஒதுக்​கப்​படு​கின்​றன.

இந்த சூழலில் தலைநகர் டெல்​லி​யில் உள்ள பாபா கரக் சிங் மார்க் பகு​தி​யில் எம்.​பி.க்​களுக்​காக 184 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்டு உள்​ளன. ஒவ்​வொரு வீடும் 5,000 சதுர அடி கொண்​ட​தாகும். நிலநடுக்​கத்தை தாங்​கும் வகை​யில் கட்​டப்​பட்டு இருக்​கும் புதிய வீடு​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

எம்​.பி.க்​களுக்​காக 4 அடுக்​கு​மாடிகளில் 184 வீடு​கள் கட்​டப்​பட்டு உள்​ளன. இந்த அடுக்​கு​மாடிகளுக்கு கிருஷ்ணா, கோதாவரி, கோசி, ஹூக்ளி நதி​களின் பெயர்​கள் சூட்​டப்​பட்டு உள்​ளன. இவை கோடிக்​கணக்​கான மக்​களுக்கு வாழ்​வளிக்​கும் 4 பிர​தான நதி​கள் ஆகும். எம்​.பி.க்​களுக்​கான பழைய குடி​யிருப்​பு​கள் பாழடைந்​து​விட்​டன. அவர்​கள் விரை​வில் புதிய வீடு​களுக்கு குடிபெயர்​வார்​கள். முந்​தைய ஆட்​சிக் காலத்​தில் டெல்​லி​யில் எம்​.பி.க்​கள் தங்க போதிய வீடு​கள் இல்​லை.

ஆனால் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014 -ம் ஆண்டு வரை எம்​.பி.க்​களுக்​காக ஒரு வீடு கூட கட்​டப்​பட​வில்​லை. கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்​றது. இதன் பிறகு எம்.​பி.க்​களுக்கு வீடு​கள் கட்ட முன்​னுரிமை அளிக்​கப்​பட்​டது. இதன்​படி கடந்த 2014-ம் ஆண்டு முதல் இப்​போது​ வரை மொத்​தம் 350 வீடு​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.

பிரதம மந்​திரி ஆவாஸ் யோஜனா மூலம் நாடு முழு​வதும் 4 கோடி ஏழைக் குடும்​பங்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்டு உள்​ளன. டெல்​லி​யில் புதிய நாடாளு​மன்​ற கட்டிடத்தை கட்டி உள்​ளோம். நாடு முழு​வதும் ஏராள​மான மருத்​து​வக் கல்​லூரி​களை கட்டி உள்​ளோம். டெல்​லி​யில் கட்​டப்​பட்​டுள்ள எம்​.பி.க்​களுக்​கான புதிய குடி​யிருப்பு ஒரே இந்​தி​யா, உன்னத இந்​தி​யாவை வலி​யுறுத்​தும் வகை​யில் அமைந்​துள்​ளது. பல்​வேறு மொழிகளை பேசும் எம்.​பி.க்​கள் இங்கு தங்க உள்​ளனர். அப்​போது அவர​வர் பிராந்​திய மொழிகளில் இருந்து சில வார்த்​தைகளை ஒரு​வருக்​கொரு​வர் கற்​றுக் கொடுக்க வேண்​டும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.