பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த குடியரசு தின விழா

Bharat Mata Charitable Foundation celebrated Republic Day

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த குடியரசு தின விழா

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் இந்திய தேசத்தின் குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சமூக சேவகர் அரிமா திரு.தோட்டம் வேலுச்சாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார்.

மருத்துவரும், கோவை கம்பன் கலைக்கூடத்தின் தலைவருமான திரு.சுப்பிரமணியன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சமாதான புறாக்களை பறக்க விட்டு சிறப்புரையாற்றினார்.முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு.இராமமூர்த்தி அவர்கள் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருள்கள் இனிப்பு மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினார்.சமூக சேவகர் திரு.சக்திவேல் அவர்கள் பள்ளி குழந்தைகள், பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதான உணவை வழங்கினார்.இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக உயிர் அமைப்பு -கோவை மாநகர காவல் துறை -பாரத மாதா நற்பணி அறக்கட்டளை இணைந்து மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞர் பட்டாளத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வை இலட்சிய துளி மக்கள் அமைப்பின் நிறுவனர் திரு.தினேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பேரணி பாரத மாதா திடலில் இருந்து துவங்கி உடையாம்பாளையம் பகுதியை முழுவதும் சுற்றி வந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் குளிர்பானங்கள், கரும்பு மற்றும் இயற்கை நூடுல்ஸ் பாக்கெட்களை சமூக சேவகர் திரு.கார்த்திக் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் சமூக சேவகர் திரு .காந்தி நகர் நாகராஜ், திரு.திலீப் குமார், திரு.பாலு சுந்தரம் அறக்கட்டளை நிர்வாகிகள் குணசேகரன், கார்த்திக், இளங்கோ, ராஜேஷ், சுஜன், ஷ்யாம், கமலக்கண்ணன், ஹரிஹரன்,ராஜா, சுரேஷ், சக்தி மாதவன், மேஸ்திரி செல்வம்,மணி.பாரதி மற்றும் இலட்சிய துளி நிர்வாகிகள் திரு.அந்தோணி,ரெக்ஸ், ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .