பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சேவைகளுக்கு கிடைத்த சிறந்த சமூகசேவை அமைப்பு-நமக்கு நாமே இஹ்வான் விருது-2024
நமக்கு நாமே இஹ்வான் விருது-2024
கோவை நமக்கு நாமே மாத இதழ் - பிரதர் ஹுட் இஹ்வான் டிரஸ்ட் (சகோதர அறக்கட்டளை) நடத்திய ஐம்பெரும் ஆண்டு விழா போத்தனூர் பிசி ஹாலில் (27-01-2024) நடந்தது.
இவ்விழாவில் தமிழகத்தின் தலைசிறந்த சமூக அமைப்புகளை கண்டறிந்து விருது வழங்கும் விழாவில் நமது உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் தொடர் சமுதாய பணிகளை அங்கீகாரம் வழங்கும் விதமாகவும், மதங்கள் கடந்து மனிதநேயத்தை விதைத்து வரும் மனிதநேய பணிகளை போற்றும் விதமாகவும்
"சிறந்த சமூகசேவை அமைப்பு - 2024 எனும் நமக்கு நாமே இஹ்வான் விருது - 2024 " எனும் உயரிய விருதை ஆன்மீக பெருமக்கள் முன்னிலையில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் சரவணன், சுஜன், செல்வி பிரியங்கா, சுபகரிணி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வழங்கி கெளரவப்படுத்தினார்கள் .நமக்கு நாமே மாத இதழ் ஆசிரியர் அவர்களுக்கும் பிரதர் ஹுட் இஹ்வான் டிரஸ்ட் நிர்வாகிகள் திரு.நவாஸ் ஷரீப் உள்ளிட்ட அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
மதங்கள் கடந்த மனித நேய பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம்