ஆட்சி அமைப்பது யார்? இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

India election

ஆட்சி அமைப்பது யார்? இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
ஆட்சி அமைப்பது யார்? இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

புதுடில்லி : டில்லியில் பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவுப்பெற்றது. அதில் தே.ஜ/. கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துனர். அதன்படி, 3வது முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது.


இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதில், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கு நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தனர். மேலும், 7 சுயேட்சை எம்.பி.,க்கள் உட்பட தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்காத 10 எம்.பி.,க்களும் ஆதரவளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதற்கிடையே காலையில் 17வது லோக்சபாவை கலைக்க ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று லோக்சபாவை ஜனாதிபதி கலைத்தார். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்றே பிரதமர் மோடி சந்தித்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.



நிதிஷ், சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதம்


பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதம் வழங்கினர். வரும் 7-ம் தேதி நடைபெறும் பா.ஜ.,எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒரு மவதாக தேர்வு செய்ய்பபட்ட பின்னர் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என கூறப்படுகிறது.



பியூஷ்கோயல் சந்திரபாபு நாயுடு சந்திப்பு


தே.ஜ., கூட்டணி கூட்டம் முடிந்த பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் இல்லத்தில் அவரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியில் பங்குபெறும் போது முக்கிய துறைகள் கேட்டு பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.