டெல்லியில் மத்திய அமைச்சருடன் ராஷ்ட்ர நிர்மான் சேனா தேசியக்கட்சியின் செயலாளர்கள் சந்திப்பு!
Rashtra Nirman Sena National Party secretaries meet Union Minister in Delhi!
ராஷ்ட்ர நிர்மான் சேனா தேசியக்கட்சியின் தலைமை அலுவலகமான டெல்லியில் தேசிய கட்சியின் உயர்நிலை நிர்வாகிகளை சந்தித்து ராஷ்ட்ர நிர்மான் சேனா கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழகத்தில் இருந்து டெல்லி சென்றிருந்தார் ராஷ்ட்ர நிர்மன் சேனா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே. மணிவண்ணன், தேசிய செயலாளர் மா. சீனிவாசன் ஆகியோருக்கு டெல்லியில் இருந்த நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் அதன் பின் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராஷ்ட்ர நிர்மன் சேனாவின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுக்கு என்னென்ன செய்யவேண்டுமென பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் இந்திய தலைநகரான டெல்லி மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாநில, மாவட்ட, மண்டலம் வாரியாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், இந்தியாவின் வருங்கால தலைமுறையான இளைஞர்களை ஒன்றிணைத்து ராஷ்ட்ர நிர்மான் சேனா கட்சியை வலுப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கு பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமினை நடத்துவதற்கு அனைத்து மாநில நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் பெண்களின் வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசில் உள்ள முக்கிய அமைச்சர்களையும், துறை சார்ந்த செயலாளர்களையும், தேசிய பொதுச் செயலாளரும்,
தேசிய செயலாளரும் சந்தித்து பேசினார்கள்.அடுத்ததாக மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு. ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா அவர்களை சந்தித்து கால்நடைகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த உயிர்ப்புடன் கூடிய ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தேசிய பொது செயலாளர் சந்திரசேகர பாண்டே மற்றும் டெல்லியில் உள்ள நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.