தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு வழங்கினார்:

All India Hindu Temples Protection Association submitted a petition to the Minister of Hindu Religious Affairs, Tamil Nadu:

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம்  அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு வழங்கினார்:

தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் மாண்புமிகு.சேகர் பாபு அவர்களை  மரியாதை நிமிர்த்தமாக அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி சந்தித்தார்.அப்போது அவர் இந்து சமய மக்களின் பல ஆண்டு கனவு மற்றும் கோரிக்கைகளான

1)இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த அனைத்து சிதிலமடைந்த திருக்கோயில்களை உடனே புரணமைத்து கும்பாபிஷேகம் செய்திட வேண்டும்.

2)கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு பல்வேறு வகையில் தரிசன கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.இது பக்தர்களிடையே பல்வேறு பாகுபாடுகளை ஏற்படுத்துகிறது எனவே ஒரே மாதிரியான  தரிசன கட்டணைத்தை கொண்டுவர வேண்டும்.

3)இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் களவு போன ஐம்பொன் சிலைகளை விரைந்து மீட்டு அந்தந்த கோயில்கள் வசம் உடனே ஒப்படைக்க அனைத்துவித நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும்.

4)அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் நலன் கருதி தரமான  அடிப்படை வசதிகளான கழிப்பறை , குளியலறை , பக்தர்கள் தங்கும் விடுதி ஏற்படுத்தி தர வேண்டும்.

5)தங்கள் துறை கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் ஏழை இந்து சமய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கிட வேண்டும்.

6)பிரசித்திப் பெற்ற அனைத்து  கோயில்களிலும் சித்த மருத்துவமணைகளை உடனே நிறுவிட வேண்டும்.

7)இந்து சமய அறநிலையத்துறை பணிநியமனத்தில் இந்து சமயத்தை சார்ந்த ஏழை மாணவர்கள் மற்றும்  விதவைகள் , கணவரால் கைவிடப்பட்டவர்கள் ,மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

8)கோயில்களில் ஆன்மீக கல்வியினை ஊக்குவிக்க வேத பாடசாலைகளை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் .

9.தங்கள் துறை கட்டுப்பாட்டில் கோயில்களில் பல ஆண்டுகளாக சட்டத்திற்கு புறம்பாக தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை உடனே வெளியேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10)அனைத்து திருக்கோயில்களின் குளங்களை தூர்வாரி அதன் தொன்மை பாராமல் பாதுகாக்க நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் .

என மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் வழங்கினார்இந்த நிகழ்வில் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் செல்வகுமார் , சுதாகர்  , வழக்கறிஞர் சுப்பையா மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.*