கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளுக்கு நகைக்கடன் - 2 பேர் கைது!!

கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளுக்கு நகைக்கடன் - 2 பேர் கைது!!

கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளுக்கு நகைக்கடன் - 2 பேர் கைது!!


கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளுக்கு நகைக் கடன் வழங்கிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளுக்கு நகை கடன் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்  செயலாளராக பணிபுரிந்து வருபவர் கலைச்செல்வி. அத்துடன் கண்காணிப்பாளராக ஜெயஸ்ரீ என்பவரும்,  நகை மதிப்பீட்டாளராக விஜயகுமார் என்பவரும் பணிபுரிந்து வந்த நிலையில் இவர்கள் மூன்று பேரும் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. நகைக் கடன் வாங்க வருவோரிடம் கமிஷன் பெறுவதற்காக கடன்கள் வழங்கி இருந்ததை தொடர்ந்து,  வங்கி தணிக்கை செய்ய வந்த கூட்டுறவு சங்கங்களுக்கான துணை பதிவாளர் சுவாதி வந்தபோது தான் இந்த மோசடி தெரியவந்துள்ளது.  இது குறித்து சென்னையில் உள்ள வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பழனி குமாரிடம் 3 பேர் மீதும் புகார் செய்த நிலையில், காஞ்சிபுரம் வணிக குற்றப்புலானாய்வுப் பிரிவு ஆய்வாளர் தேன்மொழி இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளார்.  விசாரணையில் 21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுக்கொண்டு 1.64 கோடி நகை கடன் வழங்கி உள்ளது  தெரியவந்துள்ளது . இதைத்தொடர்ந்து பெண் ஊழியர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வங்கியின் செயலாளர் கலைச்செல்வி சென்னை புழல் சிறையிலும்,  நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் செங்கல்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர் . இந்த வழக்கில் தொடர்புடைய வங்கியின் கண்காணிப்பாளராக ஜெயஸ்ரீ தலைமறைவான அதையொட்டி அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.