Tamil Content Writer | 5 Years' Experience | Mrs. Shalumathi Suresh | VLB
கடந்த 5 வருடங்களாக தமிழ் இலக்கியம் சார்ந்த எழுத்துகளை எழுதி வருகிறேன்.திருமதி.ஷாலுமதிசுரேஷ். Tamil content writing எனது துறை
எல்லோருக்கும் வணக்கம்.நான் திருமதி.ஷாலுமதிசுரேஷ். Tamil content writing எனது துறை. கடந்த 5 வருடங்களாக தமிழ் இலக்கியம் சார்ந்த எழுத்துகளை எழுதி வருகிறேன்.
என் பலம் என் எழுத்து. அதன் விரல் பிடித்தே இந்த துறையில் கால்பதித்தேன். தமிழில் வலைதளம், வலைதள பதிவுகள், தொழில் சார்ந்த விளம்பரங்கள் மற்றும் பதிவுகளை எழுதிக்கொடுக்கிறேன்.
எழுத்து...
நிறைய, நிறைய கதைகள் கேட்டு வளர்ந்தவள் நான். இந்த கதைகள்தான் புத்தகங்கள் என்ற அழகிய உலகிற்குள் எனை அழைத்துச்சென்றது. புத்தகங்கள் சூழ் உலகு என்னுடையது. தமிழின் தலைசிறந்த புத்தகங்கள் நூறை எந்த எழுத்தாளர்கள் வரிசைப்படுத்தினாலும், அதில் தொண்ணூறு சதவீதத்தை நான் வாசித்திருப்பேன். இன்னும் வாசித்துக்கொண்டும் இருக்கிறேன். தமிழின் கிளாசிக் புத்தகங்களுக்கு என் அலமாரியில் தனியிடம் எப்போதும் உண்டு. இப்படி இந்த புத்தகங்கள் எனை விரல் பிடித்து அழைத்து வந்த இடம்தான் எழுத்து. சில புத்தகங்கள் மற்றும் மின்புத்தகங்களில் என்னுடைய கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஒரு கட்டுரைத்தொகுப்பும் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு புத்தகங்கள் என்பது தீராநதி. எழுத்தென்பது தீராதாகம்.
நான்...
அறம் சூழ வாழ்பவள்.
•கோட்டோவியங்கள்,
•Oil pastel drawings
•Soft oil pastel drawings
•Portrait drawings
•Craft works
•வண்ண வண்ண கோலங்கள்
•Phtography
•Tamil calligraphy
இவை எல்லாமே என் விருப்பங்கள். ஒரு நல்ல கதைசொல்லியும் கூட. Anchor fm ல் குழந்தைகளுக்கு கதை சொல்லிவருகிறேன்.