கோவை விமான நிலையத்தை 3 மாதத்தில் 9.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தி உள்ளனர் - இந்திய விமான நிலைய ஆணையம்
2025- 26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ( ஏப்ரல், மே, ஜூன்) கோவை சர்வதேச விமான நிலையத்தை மொத்தம் 9,51,249 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். இவர்களில் உள்நாட்டு பயணிகள் 8,70,273 பேர், சர்வதேச பயணிகள் 80,976 பேர் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது
கோவை விமான நிலையத்தை ஒரு காலாண்டில் 9.5 லட்சம் பயணிகளுக்கு மேல் பயன்படுத்தியது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இதுவே 2024- 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் கோவை விமான நிலையத்தை 7,82,781 பேர் பயன்படுத்தினர். அதில் 7,28,378 உள்நாட்டு பயணிகள், 54,403 பேர் வெளிநாட்டு பயணிகள். சென்ற ஆண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், பயணிகள் எண்ணிக்கை 21% உயர்ந்துள்ளது.
கார்கோ (சரக்கு)
2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் கார்கோ சேவை பிரிவில் 3088 மெட்ரிக் டன் பொருட்கள் கையாளப்பட்டுள்ளது. இதில் 2513 உள்நாட்டு கார்கோ, 575 வெளிநாட்டு கார்கோ.
இது 2024-2025 முதல் காலாண்டில் கையாளப்பட்ட கார்கோவை விட 19% அதிகம். ஏனென்றால் அப்போது 2596 மெட்ரிக் டன் கார்கோ தான் கையாளப்பட்டது. இதில் 2198 டன் உள்நாட்டு கார்கோ, 398 டன் வெளிநாட்டு கார்கோ ஆகும்.


Yasmin fathima

