ஏன் குழந்தை வளர்ப்பை உங்களின் சேவையாக தேர்ந்தெடுத்தீர்கள் ?

Why did you choose child rearing as your service?

ஏன் குழந்தை வளர்ப்பை உங்களின் சேவையாக தேர்ந்தெடுத்தீர்கள் ?

சங்கம் வளர்த்த மதுரையின் , பெருமைகள் பல . அப்படி பட்ட மதுரை மண்ணின் , மங்கை இவர் . வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் மட்டுமே போதும் , எந்த தடையாக இருப்பினும் துணிச்சலுடன் கடந்து செல்ல இயலும் என தன் இலட்சிய பாதையில் வெற்றி நடை போட்டு சென்று கொண்டிருக்கிறார் . அவரின் பயணத்தில் பல பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பயன் அடைகின்றனர் . அவர் குழந்தைகளுக்கான Reusable worksheets மற்றும் Busy binders செய்து தருகிறார் .

இது மட்டுமின்றி colouring books மற்றும் affirmation stickers களை தானே கைபட வரைந்து தருகிறார்

தன் சேவையாக குழந்தை வளர்ப்பை கையில் எடுத்து கொண்டு பல பெற்றோர்களிடன் மாற்றத்தை உருவாக்குகிறார் நம் Sagana Muthukrishnan அவர்கள் . அவரை பற்றி நாம் தெரிந்து அறிவோம் வாருங்கள்

இந்த உலகிற்கு உங்களின் அறிமுகம்?

நான் Sagana Muthukrishnan ஒரு அன்பான மனைவியாய் , ஒன்று மற்றும் நான்கு வயதுள்ள இரண்டு ஆண் குழந்தைகளுக்கு ஒரு அக்கறையுள்ள தாயாய் என்னை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

கல்வியில் பி.ஏ ஆங்கிலம் பயின்றேன் . எனது சிறப்பம்சம் , எதையும் மாறுபட்ட கோணத்தில் பார்ப்பது .

உங்களின் தொடக்கமும் அதன் காரணமும் ?

திருமணத்திற்கு பிறகு , எனக்கு வரையும் கலையில் ஆர்வம் வந்தது ... என் குழந்தைகள் , அவர்கள் பயிலும் கல்வியை விளையாடி கொண்டே , பல விஷயங்களை கற்க வேண்டும் என்ற எண்ணம் .அதனால் வீட்டிலேயே நம் அனைவராலும் இதை செய்ய இயலும் என்று Reusable worksheets என்ற சிந்தனை தோன்றியது .அதன் செய்முறை மற்றும் பயனும் பிறரை சென்றடைய வேண்டும் என்று " Tamil kanmani " என்ற எங்களின் youtube பக்கத்தில் பகிர்ந்தேன் . அதில் இருந்து தொடங்கியது என் பயணம் . 

உங்களின் பலம் ?

என் திறமைகளை கூண்டில் அடைக்காமல் அதற்கு சிறகுகள் கொடுத்து சுதந்திரமாய் பல மாற்றங்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்க காரணமாக இருந்த மிக முக்கியமான மனிதர் என் கணவர் . அதன் பிறகு சிறுவயதில் என்னிடம் இருந்த சுட்டிதனமும் பெரியோரின் கவனிப்பும் கலந்து என் இரண்டு குழந்தைகள் நான் வெற்றி பாதையை நோக்கி செல்வதற்கான

தூண்களாவர் .

என் குடும்பம் எனது பெரிய பலம் .

ஏன் குழந்தை வளர்ப்பை உங்களின் சேவையாக தேர்ந்தெடுத்தீர்கள் ?

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரியான பாதையில் எவ்வாறு கொண்டு செல்வது என்று ஒரு ஆலோசகரை தேடுகிறார்கள் , எனவே நான் பெற்றோர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று குழந்தை வளர்ப்பை சேவையாக தேர்ந்தெடுத்தேன் .

புது தொழில் முனைவோர்களுக்கு உங்களின் கருத்து ?

ஒரு சிறந்த தொழில் முனைவோராக வேண்டும் என்றால் நான்கு விஷயங்களில் கவனம் தேவை : உங்களின் ஆரோக்கியம் , உங்கள் குடும்பத்தினரிடம் உள்ள உறவு , குழந்தை வளர்ப்பு மற்றும் உங்களின் தொழில் . இந்த நான்கு விஷயங்களில் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்கள் என்றால் நீங்கள் அசைக்க முடியாத ஒரு தொழில் முனைவோராவீர்கள் .

என்னை ஒரு சிறந்த தொழில் முனைவோராக என் துவக்க படியை எடுத்து வைக்க உதவியது ரம்யா சுந்தர் , Happy Moms Hub Community அவர்களுக்கும் என்னுடன் சேர்ந்து அங்கு பயணிக்கும் என் தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் தொழிலை எப்படி விரிவுபடுத்துனீர்கள் ?

இக்காலத்தில் அனைத்தும் கணினிமயமே . என் தொழிலை பல மனிதர்களுக்கு கொண்டு சென்றது Social media . அதில் club house மூலம் எனக்கு கிடைத்த ஒரு தளம் தான் Vera Level Business . தினந்தோறும் நான் அங்கே pitch செய்வதினால் எனக்கு நிறைய அறிமுகங்கள் கிடைத்தன . எனக்கு இந்த வாய்ப்பளித்த Vera Level Business குழுவினார்களுக்கும் , திரு. அசோக் குமார் அவர்களுக்கும் என் நன்றிகள் .