பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிகள் வழங்கும் விழாவிற்கு(தீபாவளி கொண்டாட்டம்-2024) உதவிக்கரம் நீட்டிய சாதனை தம்பதி
தீபாவளி கொண்டாட்டம்-2024
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் ஆண்டு விழாவை தீபாவளி பண்டிகை நாளில் ஓவ்வொரு வருடமும் ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும் குழந்தைகள் முதியவர்கள் -மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உணவு உடை அரிசி பழங்கள் மற்றும் அத்தியாவசிய அடிப்படை தேவையான அனைத்து மளிகைப் பொருட்களும் வழங்கி அவர்களோடு இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடமும் விழாவை கொண்டாடுவதை அறிந்த கோவை செஞ்சேரிமலை அடுத்த வலசுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு தம்பதி திருமிகு.செந்தில்குமார்-திலகவதி குடும்பத்தார்(21-10-2024) தங்கள் சார்பாக அரிசி, பிஸ்கட் ,சோப்பு , சப்பாத்தி மாவு,சேமியா பாக்கெட்கள் வழங்கியதுடன் தனது கிராமத்தில் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து 100 -க்கும் மேற்பட்ட தேங்காய்களை வழங்கி உதவினார்கள்.அவர்களுக்கும் வலசுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து தென்னை விவசாய பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
தனக்காக மட்டுமே வாழும் மனிதர்கள் மத்தியில் பிறர் பசி போக்க வாழும் செந்தில் குமார் திலகவதி குடும்பத்தார் காலத்தால் போற்றப்பட வேண்டியவர்கள்