கோவை வீரர் சுப்பிரமணிக்கு உற்சாக வரவேற்பு
கோ கோ உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில்

கோ கோ உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார் சுப்பிரமணி. அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்மையில் ஆண்களுக்கான கோ கோ இறுதி போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த அணியில் இடம்பெற்ற சுப்பிரமணி சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல உதவினார்.
சிறு வயது முதலே சிங்காநல்லூர் என்.ஜி. இராமசாமி நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பயிற்சி பெற்று மாவட்ட, மாநில, தேசிய அளவிலான கோ கோ போட்டியில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார் சுப்பிரமணி. தற்போது உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சுப்பிரமணியின் இந்த சாதனைக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.