இலவச கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்
Free Summer Volleyball Training Camp

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு விளையாட்டு கழகத்தின் சார்பில் இன்று (மே மாதம் 1ஆம் தேதி) இலவச கோடைகால கைப்பந்து பயிற்சி முகாமானது துவங்கப்பட்டது.
இதன் தொடக்க விழாவில் எங்கள் கழகத்தின் பொருளாளரும் , உடற்கல்வி ஆசிரியருமான டாக்டர் திரு.அசோக்குமார் அவர்கள் தலைமையேற்று கழகத்தின் மூத்த முன்னோடிகளான உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. சிவா அவர்கள் மற்றும் கைப்பந்து முன்னோடிகளும் மாணவர்களுக்கு வாழத்துரை வழங்கி சிறப்பித்தனர்..
மேலும் இந்த கோடைகால பயிற்சி முகாமானது வரும் மே 21 ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.