பெண் குழந்தை நலன் திட்டம் முழு விவரங்கள் 2022

Girl child benefit scheme full details 2022

பெண் குழந்தை நலன் திட்டம் முழு விவரங்கள் 2022

                         முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் என்றால் என்ன..!

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்த திட்டத்தில் அரசால் பெண்குழந்தைகளுக்கு தொகைகள் வழங்கப்படும், அரசால் வழங்கப்படும் தொகையானது குழந்தை தன் 18 வயது பூர்த்தியான பிறகு.

எதிர்காலத்தில் 3 லட்சம் ரூபாய் வரையில் கொண்டுவரப்பட்டது, தான் இந்த முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டம்.

முதலமைச்சர் பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது முதல் திட்டமானது குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்றால்.

முதலமைச்சரின் திட்டப்படி அரசால் அந்தப் பெண் குழந்தை எதிர்காலத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.

பெண் குழந்தைக்கான 2ம் திட்டமானது ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக ரூபாய் 25 ஆயிரம் வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்.

வயது வரம்பு என்ன

                       முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தில் வரும் பணத்தை உடனடியாக எடுத்து பயன்படுத்த முடியாது, அந்தப் பெண் குழந்தைக்கு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியான பிறகு மட்டுமே அதை எடுக்க முடியும்.

குறிப்பாக பெண் குழந்தைகள் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

வட்டி விகிதம் எவ்வளவு

                        18 வயது பூர்த்தியான பிறகு அந்த குழந்தையின் வங்கி கணக்கிற்கு பணம் வட்டி விகிதத்துடன் செலுத்தப்படும், குடும்பத்தில் ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து 3 லட்சம் ரூபாய் வரையிலும்.

                       இரண்டு பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு தனித்தனியாக 1,50,000/- ரூபாய் வரையிலும் குழந்தைகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் அரசாங்கத்தால்.

இதற்கு தேவைப்படும் ஆவணம் என்ன

                      இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்ற சான்றிதழ் , சாதிச்சான்றிதழ், பெண் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், கருத்தடை சான்றிதழ்.

குடும்ப அட்டை, ஆதார் அட்டை, திருமண சான்றிதழ்,குடும்ப புகைப்படம், தந்தை அல்லது தாயின் கல்வி சான்றிதழ், போன்ற ஆவணங்கள் கட்டாயம் நினைத்திருக்க வேண்டு