எதிர்மறை விமர்சனத்தை தவுடுபொடியாக்க வலிமை படக்குழு அதிரடி முடிவு.. இப்போ வந்து தியேட்டர்ல பாருங்கடா!

எதிர்மறை விமர்சனத்தை தவுடுபொடியாக்க வலிமை படக்குழு அதிரடி முடிவு.. இப்போ வந்து தியேட்டர்ல பாருங்கடா!
எதிர்மறை விமர்சனத்தை தவுடுபொடியாக்க வலிமை படக்குழு அதிரடி முடிவு..

இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் பிப்ரவரி 24 அன்று வெளியாகி இருந்தது. படம் வெளியானதிலிருந்து படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றது. படத்திற்கான உழைப்பு படத்தில் தெரிந்தாலும் படம் நினைத்தது போல் வரவில்லை என்று ரசிகர்கள் அந்த படத்தை பார்த்துவிட்டு குமுறி வருகின்றனர்.

இந்த சமயத்தில் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் எப்படி எதிர் பார்த்தார்களோ அதேபோலத்தான் படக்குழுவும் இந்த படத்தை நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று நினைத்து எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படம் கொஞ்சம் கூட ரசிகர்கள் மனதை கவராமல் போய்விட்டது.

 

அஜித் ரசிகர்களே இந்தப் படத்தை கழுவி ஊற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். அந்த அளவுக்கு படத்தை சொதப்பி இருக்கின்றார் இயக்குனர் வினோத். இப்படி இருக்கக்கூடிய சமயத்தில், இந்த விமர்சனங்கள் படத்தின் வசூலில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் என்ன செய்வது என்று யோசித்த படக்குழு, படம் சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது.

இந்த படத்தின் நீளம் தான் படத்தை பாதித்து விட்டது என்று நினைத்திருக்கிறார்கள். தேவையில்லாத செண்டிமெண்ட் காட்சிகள் தான் படத்தில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதை புரிந்துகொண்ட படக்குழு, தற்போது அதற்கு ஒரு முயற்சியை எடுத்து இருக்கிறது. அது என்னவென்றால் படத்தில் தேவையில்லாத காட்சிகளை நீக்கிவிட்டு தேவை உள்ள காட்சிகளை மட்டுமே வைத்து பணத்தை சுவாரசியப்படுத்துவதற்காக ஒரு வேலையை செய்து இருக்கின்றனர்.

 

அதாவது, படத்திலிருந்து 14 நிமிடம் வரக்கூடிய பல காட்சிகளை நீக்கி இருக்கின்றனர். படத்தின் வேகம் ஒரே நேர்கோட்டில் செல்லும் போது இந்த 14 நிமிட காட்சிகள் படத்தின் வேகத்தை குறைத்து ரசிகர்களுக்கு களைப்பை ஏற்படுத்துவதால் அதனை படக்குழு அதிரடியாக நீக்கி இருக்கிறது. வலிமை படத்தால் அஜித் ரசிகர்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு சுற்றித்திரிந்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில் இந்த கட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன் வலிமை திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வலிமை படக்குழுவின் இந்த புதிய ஐடியாவாவது படத்திற்கு வலிமை சேர்க்குமா அல்லது இதுவும் வேலைக்காகாமல் சென்று விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.