ஸ்ரீவில்லிபுத்தூர், திமுகவில் இணைந்த,7 பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள்
Srivilliputhur, affiliated to DMK, 7 Municipal Councilor AIADMK Councilors

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 7 அதிமுக கவுன்சிலர்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை இரவு திமுகவில் இணைந்தனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி , 5 நகராட்சி, 9 பேரூராட்சியைத் திமுக கைப்பற்றியது. இந்நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இந்தப் பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் 7 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 7 பேரும், சிபிஐ 1 என வெற்றி பெற்றனர்.
சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்காக திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் மாறிமாறி தங்கள் பக்கம் இழுக்க முயற்சி எடுத்து வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ் எஸ்ஆர்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் சுந்தரபாண்டியம் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் சிட்டிபாபு தலைமையில் 7 அதிமுக கவுன்சிலர்களும் திமுகவில் இணைந்தனர்.
இதனால் சுந்தரபாண்டியம் பேரூராட்சி 15-வார்டுகளையும் திமுக தன்வசப்படுத்தி உள்ளது.