கணியாகுளம் பாறையடி ஊரில் இலவச மருத்துவ முகாம்

Free Medical Camp at Kaniyakulam Rock Town

கணியாகுளம் பாறையடி ஊரில் இலவச மருத்துவ முகாம்

ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நாட்டு நலப்பணித்திட்டம், பயோனியர் குமாரசாமி கல்லூரி மற்றும் கிரீன் ஹாட் அறக்கட்டளை சார்பாக பாறையடி கணியாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சமூகநல கூடத்தில் வைத்து நடைபெற்றது. பயோனியர் குமாரசாமி கல்லூரியின் செயலர் முனைவர். மணிக்குமார் அவர்கள் தலைமை உரையாற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆறுமுகம் அவர்கள் துவக்க உரையாற்றினார், கணியாகுளம் ஊராட்சி மன்ற தலைவி திருமதி. ஏஞ்சலின் சரோனா மற்றும் 

நாகர்கோவில் மாநகராட்சி

தென்மண்டல செயலர் திரு செல்வகுமார் அவர்களும் இணைந்து குத்துவிளக்கேற்றி, வாழ்த்துரை வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்கள்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் துரைராஜ் நாட்டு நலப்பணி திட்ட அலுவர்களையும் தன்னார்வலர்களையும் பாராட்டி பேசினார்.

இம்முகாமில் பொது மருத்துவம், கண் பரிசோதனை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் சிறுநீரக மருத்துவம், பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவம், பேச்சு பயிற்சி மற்றும் செவித்திறன் சைகாலஜி தெரபி, பிசியோதெரபி சிகிச்சை மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவம் வழங்கப்பட்டது.

கிரீன் ஹாட் அறக்கட்டளையின் செயலர் பியர்லின், உறுப்பினர் வைசாக் மற்றும் ஆர்வலர்கள், பயோனியர் குமராசுவாமி கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியை முனைவர். சுபத்ரா செல்லத்துரை , மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களும் மாணவர்களும் இணைந்து முகாமினை சிறப்பாக நடத்தினார்கள்.