பாரத மாதாவின் மும்மதங்கள் இணைந்து கொண்டாடிய இப்தார் நோன்பு திறப்பு விழா
Iftar is the breaking of the fast celebrated by the three religions of Bharat Mata
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் ரமலான் பெருவிழா பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மதங்களை இணைத்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கோவை பூமார்கெட் திப்பு சுல்தான் ஹைதர் அலி பள்ளி வாசலில் (16-04-2023) நடைபெற்றது.
இந்நிகழ்வில் இஸ்லாமிய புத்தக நிலையம் - திருக்குர்ஆன் அறக்கட்டளை நிர்வாகிகள் திரு.ஜக்காரியா, அஸ்லாம், - செளரிபாளையம் கத்தோலிக்க தேவாங்க சமுகநலச்சங்கத்தின் நிர்வாகிகள் திரு.பாபு ஜான் கென்னடி- திரு.சகாயராஜ், பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாகிகள் கெளரி சங்கர் ,கார்த்திக், பிரகாஷ், ஷ்யாம் ,அயில், சுரேஷ், மெய்யரசன், சக்தி மாதவன் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நோன்பு திறந்து இஸ்லாமிய மக்களின் புனித நோன்பை சிறப்பித்தோம்.
இஸ்லாமிய சகோதரர்கள் நல்உள்ளத்தோடு வரவேற்று தொழுகை முறைகளையும் - நோன்பு முறைகளையும் சொல்லிக் கொடுத்தும் உபசரித்தும் மகிழ்வித்தார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் உள்ளிட்ட விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
மதங்கள் கடந்து மனிதநேயத்தை வளர்ப்போம்