குமரியில் பனை விதை சேகரிப்பு மற்றும் வங்கி துவக்க விழா
Palm Seed Collection and Bank Inauguration Ceremony at Kumari
தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நலவாரியம் மற்றும் க்ரீன் நீடா முன்னெடுக்கும் சென்னை முதல், கன்னியாகுமாரி வரை 1076 கிலோ மீட்டர் 14 கடற்கரை மாவட்டத்தில் 1 கோடி பனைவிதைகள் நடும்
நெடும் பணியின் ஓர் முக்கிய அங்கமாய் குமரியில் பனை விதைகள் சேகரிப்பு மற்றும் பனைவிதை வங்கி தொடங்கி வைக்கும் நிகழ்வு 02.09.2023 அன்று ராஜாக்கமங்கலம் தவவனத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு நாகர்கோவில் மாநகர மேயர் திரு. மகேஷ் கலந்துகொண்டு பனை விதை வங்கியினை தொடங்கி வைத்தார். ராஜாக்கமங்கலம் தவவனத்தின் அய்யா பால பிரஜாபதி அடிகளார் அவர்கள் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார் . நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தவப்புதல்வி அமைப்பின் நிறுவனர் சுபத்ரா செல்லத்துரை அவர்கள் குமரி மாவட்டத்தில் இப்பொழுது பனை விதைகள் குறைவாக கிடைக்க பெறுவதால் செப்டம்பர் 24 - ல் நடக்கவிருக்கும் குமரி மாவட்ட கடற்கரையோரம் 71 கிலோமீட்டர் பனை விதை நடும் நெடும் பணிக்கான விதைகள் திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடியில் இருந்து கொண்டு வரப்பட்டு நாடு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொண்டு பனை விதைகள் நட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நெடும் பணியில் பனை விதைகள் சேகரிக்க மற்றும் இணைந்து பணியாற்ற அனைவரும் முற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் "இயற்கையே இறைவன்" பனை விதைப்பு குழு,
சிற்பி அறக்கட்டளை நிறுவனர் ஜெயாஸ்ரீதரன்,
திமுக இளைஞர் துணை அமைப்பாளர் சரவணன, தமிழ்நாடு பனை நலவாரிய உறுப்பினர்கள் ஞானதாஸ், சுஷிலா, தங்கப்பன், கணபதிபுரம் பேரூராட்சி கழகச் செயலாளர் பிரபா எழில் மற்றும் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணன் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.