பாரத மாதா நற்பணி அறக்கட்டளை பெருமையுடன் நடத்திய ஆதரவற்றோர்களுக்கான இலவச தொடர் மருத்துவ முகாம்
A free series of medical camps for the destitute is proudly organized by Bharat Mata Charitable Trust
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகள் முதியவர்கள் -மாற்றுத்திறனாளிகள்- மனநிலை
பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச தொடர் மருத்துவ முகாம் (01-06-2023) பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வை *கோவை செளரிபாளையம் சண்முகப்பிரியா மருத்துவமனையின் தலைமை பொது மருத்துவர்- பிரபல நரம்பியல் நிபுணர் திரு.S.மோகனகண்ணன் அவர்கள் தலைமை தாங்கி மருத்துவசிகிச்சை
மேற்கொண்டார்.இந்நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு M.கெளரி சங்கர்,கணேசமூர்த்தி, இல்ல நிர்வாகிகள் திரு.பிரின்ஸ், சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ஆதரவற்ற முதியவர்கள் அனைவருக்கும் சர்க்கரை - இரத்தகொதிப்பு- உப்பு பாதிப்பு உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து- மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது
தரமான கல்வி!
தரமான உணவு!
தரமான மருத்துவம்!
அனைவருக்கும் கிடைக்க வைப்பதே பாரத மாதாவின் இலட்சியம்
நன்றி மலர்கள்
இந்த முகாம் தொடங்கிட நல்ஆதரவு வழங்கிய வெளிநாடுவாழ் இந்திய சகோதரி திருமதி.ஷிஜாவினோத் அவர்கள்