எளிதில் தட்கல் ரயில் முன்பதிவு செய்யலாம். மொபைல் Appல் குறிப்புகள்
Tatkal Booking in Mobile
App – Tips
Before Booking:
1. முதலில் IRCTC App update ஆகி லேட்டஸ்ட் வெர்ஷன்ல இருக்கானு பாருங்க (Login Problem வந்தா இதுவும் ஒரு ரீசன்)
2. Login பண்ணதுக்கு அப்புறம் Bio Metric Authentication “ON” பண்ணுங்க.
3. Master List ல Passenger details சேருங்கள்.
4. IRCTC Wallet ல் தேவையான அளவு பணத்தை லோட் பண்ணி வைச்சுக்கோங்க.
5. Logout – பண்ணிட்டு Finger Print வைச்சு லாகின் பண்ணி எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக் கொள்ளுங்கள்.
During Ticket Booking:
1. மொபைலை Do Not Disturb (DND) Mode ல் போடுங்கள்.
2. 9.58 /10.58 மணிக்கு மேல் லாகின் செய்வது நல்லது.
3. அதற்கு முன்னாடி லாகின் பண்ணுணா அங்க இங்க கிளிக் பண்ணி Session Expire ஆகாம பார்த்துக் கொள்ளுங்கள்
4. 9.59 / 10.59 மணிக்கு From, To , Date
, Tatkal, Premium Tatkal தேர்ந்தெடுத்து Train List பேஜ்க்கு போய் வெயிட் பண்ணவும்.
5. App லயே டைம் காட்டும் சரியாக 10/11 மணி ஆனவுடன் SL/AC ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
6. Passenger Details click பண்ணுனா கொஞ்ச நேரம் சுத்திட்டு நேரடியாக Master List காட்டும்.
7. அதில் செலக்ட் பண்ணிட்டு payment Choose பண்றப்ப Wallet Option ல IRCTC Wallet Choose பண்ணுங்க.
8. Wallet க்கு தேவை OTP கொஞ்ச நொடிகளில் பெரும்பாலும் வந்துவிடும்.
9. DND Mode ON பண்ணி வச்சு இருந்தா OTP மெசேஜ்யை கவனமாக பார்க்க வேண்டும்.
General Tips :
– Captcha வை கவனமாக கையாளவும்.
– Captcha வில் சின்ன சந்தேகம் வந்தாலும் அடுத்த Captcha வை Load பண்ணுங்க
– எல்லாமே சரியாக போனால் தான் உண்டு. ஒரு இடத்தில் Stuck ஆகி விட்டால் உடனே ஆஃப் குளோஸ் செய்வது மீண்டும் லாகின் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.ஒரு பயனும் இல்லை.
– கிட்டத்தட்ட ரோபோ மாதிரி தான் செயல்பட வேண்டும் . அதிக தொந்தரவு இல்லாத இடத்தில் அமர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
– சிறு தவறு செய்தாலும் அதை சரி செய்ய நேரம் இருக்காது.
– நேரடியாக Premium Tatkal போட்டு டிரை பண்ணலாம். ஆனா ஏதோ ஒரு காரணத்திற்காக தாமதமாகும் பட்சத்தில் ரேட் எகிறி விடும். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இரண்டு பேர் பக்கத்தில் இருந்தால் ஒருவர் Tatkal , இன்னொருத்தர் Premium Tatkal டிரை பண்ணலாம். ஒருத்தர் Wifi இன்னொருத்தர் Mobile Data விலும் முயற்சி செய்வது நல்லது. வேறு வேறு இடத்தில் இருந்து கொண்டு டிரை பணணா இது ஒர்க் ஆவாது. கம்யூனிகேஷன்லயே பாதி நேரம் போய் விடும்.