நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளை சார்பில் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சி மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா:

Tamil Traditional Art Show and Awards Ceremony for Artists on behalf of the Foundation for Yourself:

நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளை சார்பில்  தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சி மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா:

நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளை சார்பில் 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரோட்டரி ஹாலில் தரு நுண்கலை உலகளாவிய கலாச்சார கலை மன்றம் , நாஞ்சில் கலையகம் மற்றும் ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றம்  இணைந்து நடத்திய கலை நிகழ்ச்சி மற்றும் கலைஞர்களை கெளரவித்து விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நமது பாரம்பரிய கலைகளை உலகறியச் செய்து கொண்டிருக்கும் கலைஞர்களை பாராட்டும் விதமாகவும் அவர்களது கலைப் பணியை ஊக்குவித்து கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி. சுசிலா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பின் குமரிமாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னற்ற சங்கத்தின் செயலாளர்  கலைசுடர்மணி லட்சுமி கணேஷ் அவர்கள்  இறைவாழ்த்து பாடினார், அதன் பின்பு தமிழ்த்தாய் வாழ்த்தினை மங்கள இசையினை  குட்டிராஜ் , பரமசிவன் அவர்களது இசைக் கலைஞர்கள் குழுவினர் சிறப்பாக இசை வாசித்தனர். ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றத்தின் நிறுவனர் முனைவர்.சுபத்ரா செல்லத்துரை அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தரு நுண்கலை உலகளாவிய கலாச்சார கலைமன்றத்தின் கலைஞர் மற்றும் நிர்வாக இயக்குனருமான முனைவர்.சாந்தி சரவணன் தொடக்க உரையாற்றினார். கர்னல் அகாடமியின் நிர்வாக இயக்குனர் கர்னல் வி.வி.பிரசாத் இராணுவம் ஓய்வு அதிகாரி அவர்கள் மிக அருமையாக சிறப்புரையாற்றினார். நாஞ்சில் கலையகத்தின் நிறுவனர் கவிஞர்.சீத்தாராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதன் பின்பு  தவபுதல்வியின் லோகோ இந்து சேனா மாநில தலைவர் ஆ.அருள்வேலன் ஜி அவர்களால் வெளியிடப்பட்டது, நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் செயலர் திரு. ராஜகுமார் மற்றும் நிர்வாக இயக்குனர் டர்வின் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.  இறுதியில் சிவகங்கை மாவட்டம் சீதாலட்சுமி ஆட்சி மகளிர் கல்லூரி பொறியியல் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் நாகேஷ்வரி  அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.இந்த விழாவில் நமது பாரம்பரிய கலைகளான நய்யாண்டி மேளம், பறை தப்பாட்டம், கணியான் கூத்து, பரதம், தேவார பாடல், தபேலா, காவடி ஆட்டம், ஆண்டாள் வேடம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக  நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை 
தவபுதல்வியின் நிறுவன தலைவி முனைவர். சுபத்ரா செல்லத்துரை அவர்கள் மிக சிறப்பாக செய்திருந்தார்.