நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்த நாள் ஜனவரி 23
Netaji Subhash Chandra Bose's 125th Birthday January 23
இந்தியத் திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைத் தளையால் பிணைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்த நாள் இன்று - ஜனவரி 23, 1897
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸக்கு உண்டு.
இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பியவர் நேதாஜி.
அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது.
இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டத்தில், இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டிருந்த அன்றைய உலக சூழலை கருத்தில் கொண்டு, சர்வதேச சக்திகளின் துணையுடன் அன்னிய மண்ணில் களம் அமைத்து அவர் நடத்திய விடுதலை போர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கதிகலங்க அடித்தது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் ‘இந்திய தேசிய ராணுவப் படை’ பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டது குறிப்பிடத்தக்கது.
போர் சூழலில் நேதாஜியின் போர் வியூகங்களும், தாக்கும் முறைகளும் மிக நேர்த்தியானவை; தந்திரம் மிக்கவை.
அவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பிரிட்டன் ராணுவமே அதிர்ந்தது; ஓடி ஒளிந்தது.
நேதாஜியின் அதிரடித் தாக்குதலைக் கண்டு ஜப்பான் பிரமித்து நின்றது. அவரைப் பாராட்டியது.
இந்தியாவிற்கு இப்படியும் போராடத் தெரியும் என்பதை உலகத்திற்கு உணர்த்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
இப்படி உலகமே அதிர இந்திய விடுதலைக்காகப் போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை நினைவு கொண்டு போற்றுவோம் !