தென்னிலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
Massive protest in southern Sri Lanka!
தென்னிலங்கையில் ஆசிரிய உதவியாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆதரவினை வழங்கியுள்ளது.
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து கொழும்பிலுள்ள அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீண்ட காலமாக வழங்கப்படாதுள்ள தங்களது நியமனங்களை உடடியாக வழஙகுமாறு அவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் செந்தில் சிவஞானம் கருத்து வெளியிடுகையில்,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரச தலைவர் செயலகத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் செயலகத்தின் அதிகாரிகளுடன் தற்சமயம் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.