" பதினைஞ்சி வயசு பையன்கள் பாய்ந்து வந்து ...." -சிறுவர்களிடம் சிக்கிய சமையல் வேலைக்கு வந்த பெண்
"Fifteen-year-old boys come running ..." -The girl who came to work cooking with the boys
நான்கு மைனர் சிறுவர்கள் சேர்ந்து ஒரு 19 வயதான பெண்ணை பலாத்காரம் செய்ததால் போலீசார் கைது செய்தனர் . மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சிவாஜி நகர் பகுதியில் கோவண்டியின் கிழக்குப் புறநகரில் மேட்டி ரோட்டில் உள்ள ஒரு சமையல் செய்யும் நிறுவனத்தில் ஒரு 19 வயதான பெண் பணியாற்றி வந்தார் .அங்கு அவருடன் சில மைனர் சிறுவர்களும் பணி புரிந்தனர் .அந்த பெண் இன்று அதிகாலை நேரத்தில் சமையல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் ,அப்போது அந்த கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் 15 வயதான நான்கு சிறுவர்கள் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்தனர் .பின்னர் அந்த சிறுவர்களில் ஒருவர் அந்த பெண்ணிடம் சென்று அவரிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டுமென்று கூறி அங்குள்ள மாடிக்கு அழைத்து சென்றார் .
அப்போது அந்த வீட்டில் ஏற்கனவே ஒளிந்திருந்த மற்ற மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து அவர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர் .இதனால் அந்த பெண் அங்கிருந்து தப்பி வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .பின்னர் போலீசார் அந்த சிறுவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை தனிப்படை அமைத்து தேடினர் .அப்போது அந்த நான்கு பேரில் மூவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர் .மற்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர் .