மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்
மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

சென்னை: ​மாநில கல்விக் கொள்​கை​யின்​ படி முறை​யான கால அட்​ட​வணை அமைத்​து, பாடத்​திட்​டங்​களை மேம்​படுத்த வேண்டும் என்று அதி​காரி​களுக்கு அமைச்​சர் அன்​பில் மகேஸ் அறி​வுறுத்​தி​னார்.

பள்​ளிக்​கல்​வித் துறை​யின் அலு​வல் ஆய்​வுக் கூட்டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலைமை வகித்​தார். துறை செயலர் சந்​திரமோகன், இயக்​குநர் கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ் மற்​றும் துறை சார்ந்த இயக்​குநர்​கள் பலர் கலந்​து​ கொண்​டனர்.

சட்​டப்​பேர​வை​யில் பள்​ளிக்​கல்​வித் துறை தொடர்​பாக வெளி​யான அறி​விப்​பு​களின் நிலை, செயல்​படுத்த வேண்​டிய திட்​டங்​கள், துறை​யின் எதிர்​கால இலக்​கு​கள் உள்​ளிட்​டவை குறித்து இதில் விவா​திக்​கப்​பட்​டன. அதை தொடர்ந்​து, ‘தற்​போது வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்​கை​யில் இடம்​பெற்​றுள்ள அம்​சங்​களை அமல்​படுத்​து​வதற்​கான செயல் திட்​டங்​களை வகுக்க வேண்​டும்.

பாடத் திட்​டங்​களை மேம்​படுத்த கால அட்​ட​வணை தயாரித்து பணி​யாற்ற வேண்​டும்’ என்பன உட்பட பல அறி​வுறுத்​தல்​களை அமைச்​சர் அன்​பில் மகேஸ் வழங்​கி​னார். பள்​ளிக்​கல்​வித் துறை​யில் உள்ள காலிப் பணி​யிடங்​கள் மற்​றும் ஆசிரியர் பணிக்​கான போட்​டித் தேர்வு குறித்​தும் இக்​கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.