நன்றாக படிக்கும் மாணவருக்கு பணம் தடையாக இருக்க கூடாது
Money should not be a barrier to a well-educated student
தாய்மை அறக்கட்டளைக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட ஒரு தாய் தன் மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும், இரண்டாம் ஆண்டு படிக்கும் அவரின் கல்வி இதனால் தடைபட்டு விடுமோ என அச்சதோடு அவரது மகன் "நவீன்" அவர்களின் கல்லூரி சான்றிதழ், கல்வி கட்டண விபரம், ஆதார் அடையாளம், உதவித்தொகை கேட்டு கடிதம் ஆகியவை அனுப்பி வைத்தார்.
அவர் கொடுத்த விபரங்களை விசாரித்த போதுதான் உதவி கேட்ட மாணவர் தந்தையை இழந்தவர் என்பது அறிய முடிந்தது.மேலும் அவர் நன்றாக எடுத்திருக்கும் மதிப்பெண்களை பார்த்து இவருக்கு உதவி வழங்க தகுதி உடையவர் என்பதை நாம் அறிந்தோம்.
அந்த வகையில் நேற்று அவரை வர செய்து தாய்மை அறக்கட்டளையின் நலம் விரும்பி திரு கார்த்தி அவர்கள் வழங்கிய ரூ2000 தொகையோடு சேர்த்து தாய்மை அறக்கட்டளை ரூ5000 தொகையையும் சேர்த்து ரூ7000/ தொகையை மாணவர் கைகளில் தாய்மை அறக்கட்டளையின் நலம்விரும்பிகள் திரு கார்த்தி மற்றும் திருமதி பொன்தேவி அவர்கள் கைகளாலும் மாணவருக்கு வழங்கப்பட்டது.
கல்லூரி மாணவர் தாயின் கண்களில் ஓரம் மகிழ்ச்சி நிறைந்த நம்பிக்கையை காண முடிந்தது.