எழவு எடுத்தவர்களுக்கு ரோட்டரி விருது

Rotary Award for Awakening

எழவு எடுத்தவர்களுக்கு ரோட்டரி விருது

பொதுவாக ஒரு இறப்பு நிகழ்வை கொங்கு மொழியில் "எழவு" என்று சொல்வதுண்டு..அப்படி சொல்கின்ற பொதுவான சொல் கூட சில நேரங்களில் ஒருவரை திட்டவும் பயன்படுத்துகிறார்கள்..  தொடர்ந்து ஒருவன் ஒரே செயலை மீண்டும் மீண்டும் அல்லது சொல்வதற்கு எதிராக செய்தால்  "டேய்.. எழவெடுத்தவனே" என்று கோபமாக கூட சொல்வதுண்டு..

ஆனால் கோவை Sihs காலனி பகுதியில் இருந்து இயங்கி வரும் தாய்மை அறக்கட்டளையோ..தொடர்ந்து ஏழை எளியவர் வீட்டில் ஏற்படும் இறப்பு நிகழ்விற்கு இதுவரை 700க்கும் மேற்பட்ட "இலவச நீத்தார் சேவை" வழங்கி அமைதியாய் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் சேவை செய்யும் பெண்கள்  குடும்பமாக ஒன்றாக இணைந்து சேவையாற்ற வருகிறார்கள்..! பொதுவாக இறப்பு வீட்டிற்குள் நுழைவதற்கே கூட பலவாறு யோசிக்கும் காலத்தில், இறந்த வீட்டிற்குள் எந்த பாகுபாடும் பார்க்காமல் இயல்பாக சென்று சேவை வழங்கி வருகிறார்கள்.

 கோவை சுற்றியுள்ள 10 கிமி சுற்றளவில் இறந்தவர் இல்லத்தில் உள்ள உறவுகளிடம் இருந்து "இலவச நீத்தார் சேவை" கேட்டு அழைப்பு வந்தாலும் உடனே தாங்கள் சொந்த வேலைகளை அப்படியே விட்டு விட்டு, வாடகை ஆட்டோ பிடித்து, சாமியானா பந்தல் அமைப்பது,இறப்பு சான்றிதழ் வாங்க உதவுவது, மௌன அஞ்சலி செலுத்துவது,சில நேரங்களில் உடலை freezer பெட்டிக்குள் வைக்கும் பணிவரை கூட தயக்கமின்றி செய்கிறார்கள்.

ஒரு மிக பெரிய வேதனை என்னவென்றால் பெரும்பாலும் இவர்கள் செய்கின்ற சேவையால், வீட்டில் மற்றும் உறவுகளால் கேலிக்கும், புறக்கணிப்பிற்கும் ஆளாகிறார்கள்.

ஒரே நாளில் அதிக பட்சம் 7 நீத்தார் சேவைகள் கொடுத்த நாட்களும் உண்டு. அழைப்பு வந்த ஒரு மணிநேரத்தில் சேவை வழங்க வேண்டும் என்று ஓடும் இவர்கள் இறப்பு நிகழ்விற்கு சென்று விட்டு ஒவ்வொரு முறையும் குளிப்பது நடைமுறை சாத்தியாமில்லாதஒன்று என்றாலும் கிருமி நாசினி பயன்படுத்துவது மற்றும் கை கால் கழுவுவது என குறைந்தபட்சம் சுத்தம் செய்து கொள்கிறார்கள். ஆனால் சிலர் சேவை சென்று வரும் இவர்களை வித்தியாசமாய் பார்ப்பதும், விலகி ஒதுங்கி போவதும்,சில வீடுகளுக்குள் அனுமதிக்க யோசித்த பேர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சேவை திரும்ப பெறுகின்ற ஏழையின் வீட்டில்இருப்பவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் கிடைத்த உதவியை மறவாது  கைக்கூப்பி கண்ணீரோடு நன்றியோடுவணங்கும் போது.. அவர்களின் கண்ணீரே எங்களை தூய்மை படுத்துவதாய் உணர்கிறோம்.

இப்படி தொடர்ந்து எழவு(இறப்பு) நிகழ்விற்கு உதவிய சேவையை அறிந்து கோவை கேளக்ஸி ரோட்டரி கிளப் (Rotary Club of Galaxy) சார்பாக "VOCATIONAL SERVICE AWARD" 7/1/2021 வெள்ளிக்கிழமை அன்று வழங்கி வாழ்த்தினார்கள்.
தொடர்ந்து ஓடும் ஊக்கத்தையும், ஆறுதலையும் இந்த எழவு எடுப்பவர்களுக்கு(இறப்பு சேவை வழங்குபவர்களுக்கு) இதுபோன்ற விருதுகள் தருகின்றன.

நன்றி உளமாற..

#தாய்மைஅறக்கட்டளை
#Thaimaitrust
#இலவசநீத்தார்சேவை

சேவை தொடர்புக்கு : 9159158155, 9442531460, 9698485937, 9791297952