டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அளவில் பணி நிரவல்: 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு

டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அளவில் பணி நிரவல்: 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு
டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அளவில் பணி நிரவல்: 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு

சென்னை: தமிழகத்​தில் முதல் முறை​யாக மாநில அளவில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்​தில் தற்​போது 4,826 டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்றன. இந்த கடைகளில் விற்​பனை​யாளர், உதவி விற்​பனை​யாளர், விற்​பனை மேற்​பார்​வை​யாளர் என 24 ஆயிரத்துக்​கும் மேற்​பட்​டோர் பணியாற்றி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் டாஸ்​மாக் கடை பணி​யாளர்​களை கடைகளின் நிலை மற்​றும் தேவைக்கு ஏற்ப பணி​யிட மாற்​றம் செய்ய டாஸ்மாக் நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது. இதற்​காக மாநில அளவில் கலந்​தாய்வு மூலம் பணி நிர​வல் செய்ய நடவடிக்கை எடுக்கப்​பட்​டுள்​ளது. இதற்கு முன் மாவட்ட அளவில் பணி நிர​வல் செய்​யப்​பட்ட நிலை​யில் முதல் முறை​யாக மாநில அளவில் இந்த பணி​ மேற்​கொள்​ளப்​பட​வுள்​ளது.

இதுகுறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறிய​தாவது: டாஸ்​மாக் கடைகளில் தின​மும் நடக்​கும் விற்​பனை​யின் அளவை கொண்டுகடை பணி​யாளர்​களின் எண்​ணிக்கை நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.2 லட்​சம் வரை விற்​பனை நடை​பெறும் கடைகளில் ஒரு மேற்​பார்​வை​யாளர், 3 விற்​பனை​யாளர்​களும், ரூ.2-4 லட்​சம் விற்​பனை​யாகும் கடைகளில் ஒரு மேற்​பார்​வை​யாளர், 4 விற் பனை​யாளர்​களும், ரூ.4-6 லட்​சத்​துக்கு 2 மேற்​பார்​வை​யாளர், 4 விற்​பனை​யாளர்​களும், ரூ.6-8 லட்​சத்​துக்கு 2 மேற்​பார்​வை​யாளர், 5 விற்​பனை​யாளர்​களும், ரூ.8-10 லட்​சத்​துக்கு 2 மேற்​பார்​வை​யாளர், 6 விற்​பனை​யாளர்​களும் கடைகளுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் ஒரு சில இடங்​களில் குறை​வான விற்​பனை நடை​பெறும் கடைகளில் கூடு​தலாக​வும், அதி​க​மான விற்​பனை​யாகும் கடைகளில் குறை​வான பணி​யாளர்​களும் உள்​ளனர். இதனை சரி செய்ய கலந்​தாய்வு மூலம் பணி நிர​வல் மேற்கொள்ளப்படவுள்ளது. 

 இதில் ஒரே இடத்தில் 10 ஆண்​டு​களுக்கு மேலாக பணி​யாற்​றி​யுள்​ளவர்​களை விற்​பனை அதி​கம் நடக்​கும் இடங்​களில் நியமிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மேலும் ஒரு சில இடங்​களில் அதிக விற்​பனை நடந்​தா​லும் அரசி​யல் பின்​புலம் காரண​மாக குறை​வான பணி​யாளர்​களை வைத்தே விற்​பனை செய்​கின்​றனர். இதனை தடுக்​க​வும் இந்த நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இதுகுறித்து தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர் சங்க பொதுச்​செய​லா​ளர் தனசேகர் கூறியதாவது: இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்​கது, இதனால் பணி​யாளர்​களின் பனிசுமை குறை​யும். ஆனால் இதில் எந்தவித குளறு​படிகள் இல்​லாமல் செய்ய வேண்​டும். அரசி​யல் பலம், நிர்​வாகத்​தில் உயர​தி​காரி​களுன் உதவியோடு சிலர் இந்த நடவடிக்​கை​யிலும் தலை​யிட வாய்ப்புள்ளது. அது​போல ஏதும் நடக்​காமல் நிர்​வாக இயக்​குநர் சரி​யாக இந்த பணி நிர​வல்​ கலந்​தய்​வை நடத்​தி முடிக்​க வேண்டும்​. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.