உடுமலை, பொள்ளாச்சியில் இன்று அரசு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

உடுமலை, பொள்ளாச்சியில் இன்று அரசு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
உடுமலை, பொள்ளாச்சியில் இன்று அரசு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

உடுமலை / பொள்​ளாச்சி: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை, கோவை மாவட்​டம் பொள்​ளாச்​சி​யில் இன்று (ஆக.11) நடை​பெறும் அரசு விழாக்​களில் தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​கிறார். திருப்​பூர் மாவட்ட நிர்​வாகம் சார்​பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நடக்​கிறது.

இதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கலந்​து​கொண்டு ரூ.949 கோடி மதிப்​பிலான முடிவுற்ற பணி​ களை திறந்​து​வைத்​தும், ரூ.182 கோடி மதிப்​பிலான புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், ரூ.295 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை 19,785 பயனாளிகளுக்கு வழங்​கி​யும் சிறப்​புரை​யாற்​றுகிறார். தொடர்ந்​து, உடுமலை நேரு வீதி​யில் கட்​டப்​பட்​டுள்ள திமுக அலு​வல​கத்தை முதல்​வர் திறந்து வைக்​கிறார்.

உடுமலை நிகழ்ச்​சிகளை முடித்​துக்​கொண்டு பொள்​ளாச்சி செல்​லும் முதல்​வர், பிஏபி பாசனத் திட்​டம் அமைய காரண​மானவர்களான முன்​னாள் முதல்​வர் காம​ராஜர், சி.சுப்​பிரமணி​யம், வி.கே.பழனி​சாமி கவுண்​டர், பொள்​ளாச்சி நா.ம​காலிங்​கம் ஆகியோ​ருக்கு பொள்​ளாச்​சி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள முழு உரு​வச் சிலைகளை திறந்​து​வைக்​கிறார்.

இந்​நிகழ்​வு​களில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர் சென்​னை​யில் இருந்து நேற்று மாலை விமானத்​தில் கோவை வந்​தார். அவருக்கு திமுகவினர் வரவேற்​பளித்​தனர். தொடர்ந்​து, காரில் உடுமலை சென்​று, அங்கு இரவு தங்​கி​னார்​.