விநாயகர் சிலை கரைப்பால் நீர்நிலை மாசு அடையுமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இந்து முன்னணி கண்டனம்

விநாயகர் சிலை கரைப்பால் நீர்நிலை மாசு அடையுமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இந்து முன்னணி கண்டனம்
விநாயகர் சிலை கரைப்பால் நீர்நிலை மாசு அடையுமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இந்து முன்னணி கண்டனம்

சென்னை: நீர்​நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்​ப​தால்​தான் மாசு ஏற்​படு​மா, கழிவு நீர், ரசாயனக் கழி​வு​கள் நீர்​நிலைகளில் கலப்​பது மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யத்​துக்கு தெரிய​வில்​லை​யா, என இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தீபாவளி, பொங்​கல், விநாயகர் சதுர்த்தி வந்​தால்​தான் தமிழகத்​தில் மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் ஒன்று இருப்​பது வெளி​யில் தெரி​கிறது. பொங்​கலின்​போது புகை​யில்​லாத பண்​டிகை என விளம்​பரம் செய்​வது போல, பக்​ரீத்​தின்​போது ரத்​தமில்​லாத பண்​டிகை என மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் பேசுவ​தில்​லை.

வீடு​களில், பொது இடங்​களில் ஆடு மாடு​களை பலி​யிடு​வது நுண்​ணு​யிர் தொற்று உரு​வாக வாய்ப்பு உண்டு என்​பதை என்​றாவது தமிழக மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் முணு​முணுத்​தது உண்​டா, கிறிஸ்​து​மஸின்​போது மெழுகு​வர்த்தி ஏற்​று​வ​தால் அதன் புகை புற்​று​நோயை உரு​வாக்​கும் தன்மை உடையது, எனவே அதனை தவிருங்​கள் என விளம்​பரப்​படுத்​தி​யது உண்​டா

இன்று சிறு கிராமங்​களில்​கூட சுத்​தி​கரிக்​கப்​பட்ட தண்​ணீர் பயன்​படுத்​தும் நிலை இருப்​பதை பார்க்​கிறோம். காரணம் நீர் நிலைகள் அதி​லும் ஆற்று நீரில், கழி​வுநீர், ரசாயனக் கழி​வு​கள் நேரடி​யாக ஆண்டு முழு​வதும் கலக்​கிறது. அது​போல, பல ஆண்​டு​களாக கேரள மாநிலத்​தில் இருந்து தமிழக எல்​லைகளில் ஆபத்​தான ரசாயனக் கழி​வு​களை பல நூறு லாரி​களில் கொட்​டிய செய்தி ஊடகங்​களில் வந்​த​போதும், மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

எனவே, ஆண்​டுக்கு ஒருசில நாட்​களுக்கு மட்​டுமே நடக்​கும் மக்​கள் விழாவுக்கு தமிழக அரசும்,தமிழக மாசு கட்​டுப்​பாட்டு வாரிய​மும் அறி​விப்​பு​களை வெளி​யிடும்அதே பார்​வை​யில், நீர்​நிலைகளில் ஆண்டு முழு​வதும் மாசு ஏற்​படு​வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.