தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநராக ஏ.சோமசுந்தரம் நியமனம்

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநராக ஏ.சோமசுந்தரம் நியமனம்
தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநராக ஏ.சோமசுந்தரம் நியமனம்

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள 17 அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு டீன்​களும், சுகா​தா​ரத் துறை​களுக்கு புதிய இயக்​குநர்​களும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழக பொது சுகா​தா​ரம், நோய் தடுப்பு மருத்​து​வத் துறை (டிபிஎச்) இயக்​குநர் செல்​வ​வி​நாயகம், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் துறை (டிஎம்​எஸ்) இயக்​குநர் ராஜமூர்த்தி ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்​றனர். அதே​போல, குடும்ப நலத்​துறை இயக்​குநர் பதவிக்கு இது​வரை முழு பொறுப்பு அடிப்​படை​யில் யாரும் நியமிக்​கப்​ப​டா​மல் இருந்​தது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, கோவை மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை உட்பட 11 மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களின் டீன் பணி​யிடங்​கள் காலி​யாக இருந்​தன. இந்​நிலை​யில், அந்த பொறுப்​பு​களுக்கு தகு​தி​யானவர்​கள் பெயர்​கள் பரிந்​துரைக்​கப்​பட்​டு, பரிசீலனைக்கு பிறகு, அதற்​கான நியமன ஆணை​களை சுகா​தா​ரத் துறை செயலர் செந்​தில்​கு​மார் பிறப்​பித்​துள்​ளார்.

அதன்​படி, பொது சுகா​தா​ரத் துறை கூடு​தல் இயக்​குநர் ஏ.சோமசுந்​தரம், துறை இயக்​குந​ராக பதவி உயர்வு பெற்​றுள்​ளார். மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் கூடு​தல் இயக்​குநர் டி.கே.சித்​ரா, அத்​துறை​யின் இயக்​குந​ராக பதவி உயர்வு பெற்​றுள்​ளார். குடும்ப நலத்​துறை இயக்​குந​ராக சந்​தி​யா, மாநில மருத்​து​வக் கல்வி மாணவர் சேர்க்கை செயல​ராக லோக​நாயகி ஆகியோர் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீன்​களை பொருத்​தவரை, சென்னை ஓமந்​தூ​ரார் டீன் அரவிந்த், சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனைக்​கும், திரு​வண்​ணா​மலை டீன் ஹரிஹரன், ஓமந்​தூ​ரார் மருத்​து​வ​மனைக்​கும் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை மருத்​து​வக் கல்​லூரி - ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை துணை டீன் கவி​தா, கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வ​மனை டீனாக​வும், அந்த மருத்​து​வ​மனை​யின் டீனாக இருந்த லியோ டேவிட், கன்​னி​யாகுமரி டீனாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதே​போல, கோவைக்கு கீதாஞ்​சலி, செங்​கல்​பட்​டுக்கு பிரியா பசுபதி உட்பட 17 மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு புதிய டீன்​கள் நியமனம்​ செய்​யப்​பட்​டுள்​ளனர்​.