தவறான மின்கணக்கீடு செய்தால் கடும் நடவடிக்கை: நிதி கட்டுப்பாட்டாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

தவறான மின்கணக்கீடு செய்தால் கடும் நடவடிக்கை: நிதி கட்டுப்பாட்டாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்
தவறான மின்கணக்கீடு செய்தால் கடும் நடவடிக்கை: நிதி கட்டுப்பாட்டாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: தவறான கணக்​கீடு செய்​யும் கணக்​கீட்​டாளர் மீது துணை நிதி கட்​டு​பாட்​டாளர்​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து துணை நிதி கட்​டு​பாட்​டாளர்​களுக்கு நிதி இயக்​குநர் எழு​திய கடிதம்: துணை நிதி கட்​டுப்​பாட்​டாளர்கள் தங்​கள் வட்டங்களில் நடக்​கும் பணி​கள் குறித்த விவரங்​களை அந்​தந்த தலைமை பிரிவு அலு​வலங்​களுக்கு தெரிவிக்க வேண்​டும். இருப்பினும் அவ்​வப்​போது மின்​கணக்​கீட்டு பணி​யாளர்​கள் தவறாக மின்​கணக்​கீடு செய்​வ​தால் வாரி​யத்​துக்கு அவப்​பெயர் ஏற்படுகிறது.

துணை நிதி கட்​டுப்​பாட்​டாளர்​கள் மற்​றும் கணக்​கீட்டு ஆய்​வாளர் தங்​கள் வட்​டத்​துக்​குள் உள்ள தாழ்​வழுத்த பிரி​வில் அசாதாரணமாக வரும் கணக்​கீட்டு அறிக்​கைகளை ஆய்வு செய்​தால் இந்த தவறுகள் நடப்​பதை தவிர்த்​திருக்​கலாம். இதே​போல தவறான கணக்​கீடு​களை தொடர்ந்து மேற்​கொள்​ளும் பணி​யாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

எனவே கணக்​கீட்​டில் ஏதாவது அசா​தா​ரண​மான நடவடிக்கை இருந்​தால் அதை உடனடி​யாக சம்​பந்​தப்​பட்ட தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்​டும். அதை தொடர்ந்து அறிக்​கை​யை​யும் சமர்ப்​பிக்க வேண்​டும். இனி வரும் காலங்​களில் இதை முறை​யாக கடைபிடிக்க வேண்​டும்.