மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்வர் ராஜா
சென்னை,
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக-பா.ஜனதா இடையே மீண்டும் கூட்டணி மலர்ந்ததால், அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் கடந்த மாதம் 21-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த 20 நாளில் அவருக்கு திமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர், திமுக இலக்கிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.
இந்த நிலையில், திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்ட அன்வர் ராஜா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி இருந்து வந்தார். அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் திமுக இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Yasmin fathima

