திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது? - ஐகோர்ட் கேள்வி

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது? - ஐகோர்ட் கேள்வி
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது? - ஐகோர்ட் கேள்வி

மதுரை: ‘​திருப்​பரங்​குன்​றம் மலையை சிக்​கந்​தர் மலை என அழைக்க என்ன ஆதா​ரம் உள்​ளது?’ என உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழி பலி​யிட​வும், அசைவ உணவு பரி​மாற​வும் தடை விதிக்​கக் கோரிய வழக்கில் 2 நீதிப​தி​கள் மாறு​பட்ட தீர்ப்பு வழங்​கிய​தால் இந்த வழக்​கு​கள் 3-வது நீதிபதி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் விசா​ரித்து வரு​கிறார்.

இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​த​போது, “திருப்​பரங்​குன்​றம் மலையை சிக்​கந்​தர் மலைஎன அழைக்க என்ன ஆதா​ரம் உள்​ளது? ஆடு, கோழி பலி​யிட்டு கந்​தூரி விழா நடத்த அனு​மதி உண்​டா? நெல்​லித்​தோப்பு பகு​தி​யில் இஸ்​லாமியர்​கள் தொழுகை நடத்​து​வதற்கு அனு​மதி இருக்​கிற​தா?” என நீதிபதி கேள்வி எழுப்​பி​னார். இதற்கு மனு​தா​ரர்​கள் தரப்​பில், “திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழி பலி​யிடு​வ​தால் மலை​யின் புனிதம் கெடும், தீட்டு ஏற்​படும்” என வாதிடப்​பட்​டது.

அரசு தரப்​பில், “தீட்டு என்​பதே மனித குலத்​துக்கு எதி​ரானது. தீட்டு என்​பது சாதி​யிலோ, மதத்திலோ, மனிதர்​களுக்​குள்ளோ இருக்​கக் கூடாது என்​பது​தான் தமிழக அரசின் நிலைப்​பாடு. மிக​வும் பிரபல​மான அழகர்​கோவிலில் பதினெட்​டாம்​படி கருப்​புக்கு கிடா வெட்​டிய பிறகு​தான் பெரு​மாளையே தரிசிக்க செல்​கின்​றனர்.

அவ்​வாறு இருக்​கும்​போது எப்​படி இது தீட்​டாகும்? எனவே தமிழக அரசு தீட்டு என்ற சொல்லை எந்த விதத்​தி​லும் அனு​ம​திக்​காது” என வாதிடப்​பட்​டது. மேலும் அரசு தரப்​பில், திருப்​பரங்​குன்​றம் மலை​யின் ஒரு பகுதி சிக்​கந்​தர் மலை என அழைப்​ப​தற்​கான வரு​வாய்த் துறை ஆவணங்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. அதே​போல், நெல்​லித்​தோப்பு பகு​தி​யில் இஸ்​லாமியர்​கள் தொழுகை நடத்​து​வதற்கு எந்த ஆட்​சேபனை​யும் இல்​லை. தர்கா பகு​தி​யில் ஆடு, கோழி பலி​யிடு​வதற்கு எவ்​வித தடை​யும் இல்​லை.

ஒரு​வரின் மத வழி​பாட்​டில் மற்​றொரு​வர் தலை​யிட முடி​யாது. இந்​தியா வேற்​றுமை​யில் ஒற்​றுமை கொண்ட நாடு என்​றும் வாதிடப்​பட்​டது. இதையடுத்து மத்​திய தொல்​லியல் துறை பதிலளிக்க உத்​தரவிட்டு விசா​ரணையை ஆக.13-க்கு நீதிபதி தள்​ளி​வைத்​தார்.