`நடுத்தர மக்களுக்கென ஒன்றும் இல்லை' - மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கருத்து! விகடன் Daily

`Nothing for the middle class' - Congress comment on federal budget! Vikatan Daily

`நடுத்தர மக்களுக்கென ஒன்றும் இல்லை' - மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கருத்து! விகடன் Daily

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, 2022-2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மின்னணு முறையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த திட்டங்களைப் பற்றி சுமார் 92 நிமிடங்கள் பேசிய நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் கரன்சி, க்ரிப்டோ கரன்சி மீது 30% வரி, தபால் நிலையங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை, ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில் இன்று வெளியான மத்திய பட்ஜெட் பற்றி தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, ``இது மோடி அரசின் ஜீரோ பட்ஜெட். இந்த பட்ஜெட்டில், மாத சம்பளதாரர், நடுத்தர மக்கள், ஏழைகள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் என யாருக்கும் ஒன்றுமில்லை" என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ``இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கக்கூடிய பட்ஜெட், இதில் ஒன்றுமில்லை இன்று தெளிவாகத் தெரிகிறது. பயங்கரமான பணவீக்கத்தை எதிர்கொண்டு வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி விலக்கு இல்லை. பாதுகாப்புத்துறை மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் வேறு எந்த அவசர முன்னுரிமைகள் பற்றியும் இந்த பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நல்ல நாள்கள் வருவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் இந்தியா காத்திருக்க வேண்டும்" என்று மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.